கொரோனா பரவல் காரணமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது ஓரளவுக்கு இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில், மீண்டும் ஷூட்டிங்கை ஆரம்பித்தனர்.
அக்டோபர் 25ம் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ராமேஜி ராவ் ஸ்டியோவில் ஷூட்டிங் நடைபெற்றது. அதில் தல அஜித் செம்ம ஃபிட் அண்ட் எங் லுக்கில் பங்கேற்றார்.
ஐதராபாத்தில் தன்னை காண வந்த ரசிகர்களுடன் அஜித் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவருடைய கையில் இருந்த பெரிய தழும்பை பார்த்து ரசிகர்கள் கதி கலங்கி போயினர்.
அப்போது ஆக்ஷன் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ஸ்டேண்ட் காட்சிகளில் நடித்த அஜித்திற்கு மீண்டும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் தல அஜித் சிறிது நேரத்திலேயே வந்து தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துள்ளார். தற்போது படக்குழு கொரோனா பரவல் இல்லாத ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு வருகிறது.
வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியான அஜித்திற்கு பைக் மற்றும் கார் சேசிங் மற்றும் பைட் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தல அஜித் ஸ்டைலாக பைக் ஸ்டேண்ட் செய்த போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த பைக்கின் விலை மற்றும் ஸ்பீடு போன்ற தகவல்கள் குறித்து அஜித் ரசிகர்கள் பெருமையாக பேசி வருகின்றனர். mv agusta brutale 800 என்ற இந்த பைக்கின் ஷோரூம் விலை 15 லட்சத்து 59 ஆயிரம். அதுவே ஆன் ரோடு விலை 16 லட்சத்து 99 ஆயிரம் ஆகும்.
244 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க கூடி இந்த பைக்கில் தல அஜித் பறந்து பறந்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளதால், வலிமை படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.