காந்த கண்ணழகி சில்க் ஸ்மிதா பற்றி யாரும் அறிந்திடாத தகவல்கள்... இதோ...!

First Published | Jul 6, 2020, 11:54 AM IST

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மின்னிக்கொண்டிருந்த போதே திடீரென தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா பற்றிய யாருக்கும் தெரியாத சில தகவல்கள் இதோ... 

சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. வறுமையின் கோரப்பிடில் இருந்த குடும்பத்தில் பிறந்த சாதாரண பெண். ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் சிறந்த நடிகையாக வலம் வர வேண்டும் என்ற ஆசை சிறு வயதில் இருந்தேஇருந்தது.
வறுமையால் தவித்த சில்க் ஸ்மிதாவின் குடும்பம் அவருக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. கணவன் வீட்டிலும் மாமியார் தொல்லையால் அவதிப்பட்ட சில்க் ஸ்மிதா, சினிமா தான் சரியான பாதை என நினைத்து சென்னை வந்துள்ளார்.
Tap to resize

பட்டு போன்ற உடலுக்கு சொந்தக்காரி என்பதால் சில்க் ஸ்மிதா என பெயர் வந்ததாக பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வினுசக்ரவர்த்தி அறிமுகப்படுத்திய முதல் படத்தில் சிலுக்கு என்ற பெயரில் நடித்தார். அன்றிலிருந்து அது அவருடைய பட்டப்பெயராக மாறியது
தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரைத்துறைக்கு வந்த 4 ஆண்டுகளிலேயே சில்க் ஸ்மிதா கிட்டதட்ட 200 படங்களில் நடித்திருந்திருந்தார். இதனால் என் மீது பொறாமைப்பட்டு வதந்தி பரப்புவதாக சில்க் ஸ்மிதாவே தெரிவித்துள்ளார்.
ஷூட்டிங் ஸ்பார்ட்டில் ஒருநாள் சில்க் ஸ்மிதா கடிச்சிட்டு போட்ட ஆப்பிளை எடுக்க ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்ததாம். அதனால் அந்த ஆப்பிளை ஏலம் விட்டுள்ளனர். 2 ரூபாய் மதிப்புள்ள அந்த ஆப்பிளை 120 ரூபாய்க்கு சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகர் ஒருவர் ஏலம் எடுத்துள்ளார். அப்படி அந்த காலத்தில் ரஜினி, கமலுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளம் சில்கிற்கு இருந்தது.
சில்க் ஸ்மிதா என்றுமே கவர்ச்சி கன்னியாக வலம் வர ஆசைப்பட்டதில்லை. சாவித்ரி, சரிதா, சுஜாதா போல் நல்ல நடிகையாக வலம் வர வேண்டும் என்று தான் ஆசைப்பட்டார். அதற்காக நிறைய இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார்.
எப்போதுமே சில்க் ஸ்மிதாவை இன்னும் சின்னதா டிரஸ் போடுங்க? என்று தான் இயக்குநர்கள் சொல்வார்களாம். ஆனால் இயக்குநர் ராஜ் கபூரோ குட்டியான உடையில் வந்த சில்க்கை பார்த்து... என்னம்மா இவ்வளவு சின்ன உடையில் வந்திருக்க எனக்கூறி, நடிகைக்கு நிகராக டிரஸ் போடச் சொன்னாராம்.
புகழின் உச்சில் இருந்த போதும் சாதாரண பெண்ணாக வலம் வர வேண்டும் என ஆசைப்பட்டார். மூன்றாம் பிறை போல் ஒரு படத்தில் நடித்துவிட்டு, திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும் என்ற சில்க் ஸ்மிதாவின் ஆசை நிறைவேறாமலே போனது.
ஒருமுறை அவுட்டோர் ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்த், சில்க் ஸ்மிதா நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பிரேக்கில் நிறைய ரசிகர்கள் ஆட்டோ கிராப் வாங்க பாய்ந்துள்ளனர். அவர்கள் ஆட்டோ கிராப் வாங்க போட்டி போட்டது சில்க் ஸ்மிதாவிடம் இதை பார்த்து சூப்பர் ஸ்டாரே வாய் பிளந்துவிட்டாராம்.
சில்க் ஸ்மிதா ஒருவரை காதலித்ததாகவும் அந்த காதல் தோல்வியால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடைசியாக நடிகையும், தனது தோழியுமான அனு ராதாவிற்கு தான் போன் செய்துள்ளார். ஏதோ காரணங்களால் அனு ராதாவால் அன்று இரவு சில்க் ஸ்மிதாவை சந்திக்க முடியாமல் போக, மறுநாள் காலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி மட்டுமே அனு ராதாவிற்கு கிடைத்துள்ளது.

Latest Videos

click me!