யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் யார் தெரியுமா? வாயடைத்துப் போன கோலிவுட்!

Published : Mar 08, 2026, 11:42 AM IST

அதிகம் சம்பளம் வாங்குவது விஜய், ரஜினி என நினைக்கிறீர்களா? அதுதான் ட்விஸ்ட்! இந்தியாவிலேயே ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊதியம் வாங்கும் அந்த 'தமிழ்' நடிகர் யார்? கோலிவுட்டையே அதிரவைத்த அந்த ரகசியம் இதோ!

PREV
16
சம்பளம் முக்கியம் பாஸ்.!

தமிழ் சினிமா என்றாலே நம் நினைவுக்கு வருவது ரஜினி, விஜய் தான். ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி, இந்தியாவிலேயே அதிக ஊதியம் பெறும் நடிகர்கள் பட்டியலில் இவர்கள்தான் டாப் என்று இவ்வளவு காலம் பேசப்பட்டு வந்தது. ஆனால், இப்போது கிடைத்துள்ள ஒரு அதிரடித் தகவல் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஆடிப்போக வைத்துள்ளது. ரஜினியையும் விஜய்யையும் ஓரங்கட்டிவிட்டு, இந்தியாவின் 'காஸ்ட்லி' நடிகராக உருவெடுத்திருப்பது யார் என கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

26
நாள் கணக்கில் பார்த்தால் தலைசுற்றும்!

சமீபத்தில் நடிகர் யூகி சேது அளித்த ஒரு பேட்டி தான் இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்தப் பேட்டியில் கமல்ஹாசனின் சம்பளம் குறித்த ஒரு ரகசியத்தை அவர் போட்டு உடைத்துள்ளார். பொதுவாக ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள் என்றால், அவர்கள் ஒரு படத்திற்காக 50 முதல் 100 நாட்கள் வரை உழைக்கிறார்கள். ஆனால், கமல்ஹாசன் 'கல்கி 2898 AD' இரண்டாம் பாகத்திற்காக வாங்கிய சம்பளத்தை நாள் கணக்கில் பார்த்தால், அது ரஜினி, விஜய்யை விட பல மடங்கு அதிகம் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

36
யூகி சேதுவிடம் உண்மையை உடைத்த கமல்!

இது குறித்து யூகி சேது பகிரும் போது, "கமலின் பிறந்தநாள் அன்று அவரைச் சந்தித்தேன். அப்போது அவரிடம், 'நீங்கதான் இந்தியாவின் காஸ்ட்லி நடிகர். ஒரு நாளைக்கு 1 மில்லியன் டாலர் சம்பளம் வாங்குறீங்களாமே?' என்று கேட்டேன். அதற்கு கமல் சிரித்துக் கொண்டே, 'யார் சொன்னது?' என்று கணக்கு கேட்டார்." உடனே யூகி சேது, "20 நாள் கால்ஷீட்டிற்கு 150 கோடி ரூபாய் என்றால், ஒரு நாளைக்கு 1 மில்லியன் டாலர் தானே?" என்று விளக்க, அங்கிருந்த தயாரிப்பாளர் குறுக்கிட்டு, "அவர் கொடுத்தது 20 நாள் கால்ஷீட் இல்லீங்க.. வெறும் 10 நாள் தான்!" என்று கூறி குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

46
ஒரு நாளைக்கு 15 கோடியா?

இந்த கணக்கின் படி பார்த்தால், 10 நாட்களுக்கு 150 கோடி ரூபாய் என்றால், கமல்ஹாசன் ஒரு நாளைக்கு வாங்கும் ஊதியம் 15 கோடி ரூபாய் ($2 Million)! இந்தியாவில் எந்த ஒரு சூப்பர் ஸ்டாரும் இதுவரை ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் ஊதியமாகப் பெற்றதில்லை என்கிறது சினிமா வட்டாரம்.

56
கமல்ஹாசனின் மாஸ் கம்பேக்!

விக்ரம் படத்தின் மெகா ஹிட்டிற்கு பிறகு, கமலின் மார்க்கெட் விண்ணைத் தொட்டுள்ளது. கல்கி படத்தின் முதல் பாகத்தில் வெறும் 5 நிமிடம் வந்து மிரட்டிய 'சுப்ரீம் யாஷ்கின்' கதாபாத்திரம், இரண்டாம் பாகத்தில் முழுநேர வில்லனாக வரப்போகிறது. இதற்காகவே அவர் இந்த பிரம்மாண்ட தொகையைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

66
சம்பளத்திற்கும் கமல்தான் வாத்தியார்

ரஜினி, விஜய் என அடுத்த தலைமுறை நடிகர்கள் போட்டியில் இருந்தாலும், "நடிப்புக்கு மட்டுமல்ல.. சம்பளத்திற்கும் நான் தான் வாத்தியார்" என்பதை உலக நாயகன் மீண்டும் நிரூபித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories