Trisha watched Vikram Twice : அட ..இத்தனை முறையா? விக்ரம் குறித்த அலாதி அன்பை வெளியிட்ட த்ரிஷா!

Kanmani P   | Asianet News
Published : Jun 06, 2022, 05:16 PM IST

Trisha watched Vikram Twice : விக்ரம் படத்தை இருமுறை பார்த்த குஷியில் நடிகை த்ரிஷா போட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரி லைக்குகளை அள்ளி வருகிறது.

PREV
14
Trisha watched Vikram Twice : அட ..இத்தனை முறையா? விக்ரம் குறித்த அலாதி அன்பை வெளியிட்ட த்ரிஷா!
vikram movie

கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசிலின் நடித்த விக்ரம் படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ] பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.. கமல்ஹாசனின் தீவிர ரசிகையான த்ரிஷா, விக்ரமை 3 நாட்களில் இரண்டு முறை பார்த்தார். அவர் படத்தை முழுமையாக ரசித்ததன் காரணமாக இரண்டாவது முறை  பார்க்க முடிவு செய்தார். 

24
vikram movie

கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் பல மொழிகளில் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது . இப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் இருந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான பிறகு த்ரிஷா சமீபத்தில் விக்ரமை இரண்டாவது முறையாகப் பார்த்தார். இரண்டாவது முறையாக படத்தைப் பார்ப்பதற்காக நடிகை சென்னையில் உள்ள ஏஜிஎஸ் சினிமாவுக்குச் சென்றார். தியேட்டரில் இருந்து ஒரு வீடியோவைப் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

34
Vikram

விக்ரம், லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய  ஆக்ஷன் என்டர்டெய்னர் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் மூன்றே நாட்களில் ரூ 150 கோடிக்கு மேல் வசூல் செய்தது .

44
vikram movie

கமலுடன்  காளிதாஸ் ஜெயராம், நரேன், செம்பன் வினோத் மற்றும் ஜாபர் ஆகியோர் துணை நடிகர்களின் ஒரு பகுதியாக உள்ளனர். இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைத்துள்ளார். தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது..

click me!

Recommended Stories