'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு கல்யாணப்பரிசாக BMW கார் கொடுத்த தயாரிப்பாளர்!

Published : Oct 28, 2025, 09:48 PM IST

Tourist Family Director Receives BMW car: 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் மூலம் பிரபலமான  இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த்திற்கு  தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான் கார் பரிசாக வழங்கியுள்ளார்.

PREV
15
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றி:

இந்த ஆண்டு, பெரிய பட்ஜெட் படங்களுக்கு கிடைக்காத வரவேற்பும், ஆதரவும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு கிடைத்தன. அந்த வகையில் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் நடிப்பில் சுமார் 7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ. 80 கோடிக்கும் மேல் கல்லா கட்டிய திரைப்படம் தான் 'டூரிஸ்ட் ஃபேமிலி'.

25
அபிஷன் புரபோசல்:

ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் சக்ஸஸ் மீட்டில்... தன்னுடைய பள்ளி தோழியும், காதலியான அகிலா இளங்கோவனுக்கு திருமண புரோபோசலை கூறியதோடு, அக்டோபர் 31-ஆம் தேதி என்னை திருமணம் செய்து கொள்வாயா என்றும் கேட்டார். திரைப்படத்தை மிஞ்சும் விதத்தில் இவரது அணுகுமுறை இருந்ததாக பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

35
அபிஷன் திருமணம்:

இதை தொடர்ந்து, 'டூரிஸ்ட் ஃபேமிலி'  பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகின்றனர். தற்போது இவருக்கு திருமணப் பரிசாக ரூபாய் 1 கோடி விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார் MRP Entertainment  தயாரிப்பாளர்  மகேஷ் ராஜ் பசிலியான்.

45
10 மடங்கு லாபம்:

இலங்கை வாழ் மக்களின் கதைக்களத்தில்,  எளிமையான திரைக்கதையில், மனித உணர்வுகளின் வெளிப்பாடாக எடுக்கப்பட்ட, ஃபேமிலி எண்டர்டெயினரான, இந்த படத்தை MRP Entertainment நிறுவனம் தான் தயாரித்திருந்தது. அதே போல் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியனுக்கு இந்த படம் 10 மடங்கு லாபத்தையும் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

55
ஹீரோவாக மாறிய அபிஷன்:

பெரிய நடிகர்களை வைத்து இயக்கும் படங்கள் தான் மக்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என்கிற எண்ணத்தை தவிடுபொடி ஆக்கும் விதமாக, MRP Entertainment தொடர்ந்து வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து குட் நைட், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற எளிமையான கதைகள் மூலம் ஹிட் கொடுத்து வருகிறது. அபிஷன், தற்போது பிரதீப் ரங்கநாதன் பாணியில் ஒரு படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories