Top 5 Hit Songs in Tamil Cinema : தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளியான பாடல்களில் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து ரீல்ஸ் போட வைத்த டாப் 5 ஹிட் பாடல்கள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Top 5 Hit Songs in Tamil Cinema : ஒவ்வொரு ஆண்டும் தமிழில் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது. இப்படி வெளியாகும் படங்களில், ஒரு படத்தில் சராசரியாக 3 அல்லது 4 பாடல்கள் இடம் பெறுகின்றன. இப்படி இடம்பெறும் அனைத்து பாடல்களுமே, ரசிகர்கள் மனதில் அதிகம் இடம் பிடித்து விடுவதில்லை. ஆனால் ஒரு சில பாடல்கள் ரசிகர்களை மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. தன்னை மறந்து ரசிகர்களை அதிகம் முணுமுணுக்க வைத்த டாப் 5 பாடல்கள் குறித்து, இந்த பதிவில் பார்க்கலாம்.
24
பீஸ்ட் அரபிக்குத்து பாடல்
இந்த லிஸ்டில் முதல் இடத்தில் சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கவர்ந்த பாடலாக உள்ளது, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், விஜய் - பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் தான். சிவகார்த்திகேயன் எழுதி இருந்த இந்த பாடலுக்கு, அனிரூத் இசையமைத்திருந்தார். இந்த பாடல் தான் இந்த வருடத்தில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட பாடல்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
34
வெந்து தணிந்தது காடு - மல்லிப்பூ பாடல்
இதை தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் உள்ளது என்றால் அது... இயக்குனர் கெளதம் மேனன், சிம்பு கூட்டணியில் சமீபத்தில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இடம்பெற்ற பாடலான மல்லிப்பூ பாடல் தான். ஏ ஆர் ரகுமான் இசையில், தாமரை வரிகளில் வெளியான இந்த பாடலை மதுஸ்ரீ இந்த பாடலை பாடியிருந்தார் இந்த பாடல், அதிகம் ரசிக்கப்பட்ட பாடலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
44
திருச்சிற்றம்பலம் - மேகம் கருக்காத
மூன்றாவது இடத்தில் உள்ளது நடிகர் தனுஷின் பாடல் தான். சமீபத்தில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்காத' பாடல் உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களான தாய் கிழவி, தேன்மொழி போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதிகம் ரசிகர்கள் மனதை கவர்ந்த பாடல் என்றால் அது மேகம் கருக்காத பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.