அரிவாள எடுத்து வெட்டுற அளவுக்கு... விமர்சனங்கள் வன்மமா மாறிடுச்சு - துணிவு இயக்குனர் எச்.வினோத் காட்டம்

First Published Dec 13, 2022, 1:55 PM IST

துணிவு படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒருமாதமே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தின் இயக்குனர் எச்.வினோத் சமீபத்திய பேட்டியில் விமர்சனங்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை, வலிமை என அடுத்தடுத்து அஜித் நடித்த இரண்டு படங்களை இயக்கிய எச்.வினோத் தற்போது மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ள படம் துணிவு. வலிமை படத்தைப் போல் இந்த படத்திலும் அஜித்துக்கு ஜோடி இல்லை. ஆனால் அவரது டீம்மேட் ஆக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து இருக்கிறார். இதுதவிர பிக்பாஸ் பிரபலங்கள் அமீர், பாவனி, சிபி ஆகியோரும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்கள்.

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. குறிப்பாக விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக இப்படம் ரிலீஸ் ஆவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது.

துணிவு படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒருமாதமே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இயக்குனர் எச்.வினோத் படம் குறித்து பல்வேறு பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் விமர்சனங்கள் குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதையும் படியுங்கள்... அமைச்சராக பொறுப்பேற்றதும்... உதயநிதி ஸ்டாலின் செய்யப்போகும் முதல் வேலை இதுதானாம்! வெளியான தகவல்

அதில் அவர் கூறியதாவது : “ஒரு இயக்குனராக படத்தின் மீதுள்ள விமர்சனங்களை ஏற்க வேண்டியது என்னுடைய கடமை. விமர்சனங்களை மண்டைக்குள் ஏற்றிக்கொள்ள மாட்டேன். நியாயமான விமர்சனங்களை கேட்பேன். முடிந்தால் திருத்திக்கொள்வேன். ஆனால் தற்போதுள்ள விமர்சனங்கள் எல்லாம் அரிவாளை எடுத்து வெட்டுற அளவுக்கு வன்மமா மாறிடுச்சு. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கடந்துபோவதே சரி என நினைக்கிறேன்” என காட்டமாக பேசி இருந்தார்.

அதேபோல் வலிமை தோல்விப் படமா என்கிற கேள்விக்கு பதிலளித்த எச்.வினோத், “வலிமை ரிலீஸ் ஆனபோது கலவையான விமர்சனங்கள் வந்தது உண்மைதான். ஆனால் பேமிலி ஆடியன்ஸுக்கு படம் பிடித்துப் போனது. பணம் போட்ட தயாரிப்பாளர் தொடங்கி அனைவருக்குமே அது வெற்றிப் படமாக அமைந்தது. நான் பார்த்த வேலைக்கான வெற்றியை வலிமை எனக்கு கொடுத்தது என்பது தான் உண்மை” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... அத்துமீறல் புகார்... விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பீஸ்ட் பட வில்லன்

click me!