கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் மே மாத இறுதியில் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. மறுபுறம் ஜூன் மாதம் வரிசையாக பிரம்மாண்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.
25
தக் லைஃப்
ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. மாஸ்டர் பீஸ் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கமல்ஹாசன் உடன் சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் பணியாற்றி இருக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரன் பணியாற்றி உள்ளார். தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது.
35
குபேரா
தக் லைஃபை தொடர்ந்து தமிழில் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ள மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் குபேரா. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் நாகார்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். குபேரா திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 20ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள மார்கன் திரைப்படமும் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்தை லியோ ஜான் பால் இயக்கி உள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி தான் தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், ப்ரீத்திகா, பிரிகிடா, தீப்ஷிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் மாதம் 27ந் தேதி திரைக்கு வர உள்ளது.
55
ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் மற்ற மொழி படங்கள்
அக்ஷய் குமார் நடித்துள்ள ஹவுஸ்ஃபுல் 5 திரைப்படம் வருகிற ஜூன் 6-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் அமீர் கான் நடிப்பில் உருவாகி இருக்கும் சிதாரே ஜமீன் பார் திரைப்படம் ஜூன் 20ந் தேதி திரைக்கு வர உள்ளது. கஜோல் நடித்துள்ள மா என்கிற இந்தி படம் வருகிற ஜூன் 27ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
தெலுங்கில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ஹரிஹர வீர மல்லு திரைப்படம் வருகிற ஜூன் 12ந் தேதி ரிலீஸ் ஆகிறது. அதேபோல் விஷ்ணு மஞ்சு தயாரித்து நடித்துள்ள கண்ணப்பா என்கிற பிரம்மாண்ட திரைப்படம் வருகிற ஜூன் 27ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.