முதல்வர் விஜய் பதவியேற்பில் அந்த 3 பேர் இருந்திருக்க வேண்டும்.! பொதுமக்கள் கருத்தை போட்டுடைத்த சமுத்திரகனி.!

Published : May 26, 2026, 01:16 PM IST

நடிகர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றது குறித்து இயக்குனர் சமுத்திரகனி பேசியது வைரலாகியுள்ளது. பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பத்தினர் இல்லாதது குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

PREV
15
உண்மையை பேசிய இயக்குனர் சமுத்திரகனி

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும், சரித்திர நிகழ்வாகவும் அமைந்துள்ளது நடிகர் விஜய்யின் முதலமைச்சர் பதவியேற்பு விழா. சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே, அதை உதறித்தள்ளிவிட்டு மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்த விஜய்க்கு, தமிழக மக்கள் தங்களது பேராதரவை அளித்து அரியணையில் ஏற்றியுள்ளனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் குறித்து, விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி பேசிய வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, விஜய் பதவியேற்பு விழாவில் ஆந்த 3 பேர் பங்கேற்று இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து  "அந்த 3 பேர் யார்?" என்ற கேள்விக்கான விடை ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

25
இணையத்தை ஆக்கிரமித்த "அந்த 3 பேர்" யார்?

பதவியேற்பு விழா குறித்துப் பேசிய சமுத்திரகனி, “முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் 3 பேர் இருந்திருக்க வேண்டும். அவர்கள் இல்லாதது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார். அந்த 'மூன்று பேர்' அரசியல் தலைவர்களா அல்லது சினிமா பிரபலங்களா என நெட்டிசன்கள் பலரும் விவாதித்து வந்தனர்.

தற்போது சமுத்திரக்கனி சூசகமாகக் குறிப்பிட்டது, விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஷாஷா ஆகியோரைத்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியின்போது, அவனது குடும்பத்தினர் அருகில் இருப்பதுதான் அவருக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தரும். அந்த வகையில், விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் அவரது குடும்பத்தினர் அருகில் இல்லாததையே சமுத்திரகனி இவ்வாறு குறிப்பிட்டுப் பேசியதாகத் தெரிகிறது.

35
பணநாயகத்தை வென்ற ஜனநாயகம்

விஜய்யின் அரசியல் வெற்றி குறித்து சமுத்திரகனி மேலும் பல சுவாரஸ்யமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

விமர்சனங்களுக்கு பதிலடி: "அரசியலில் எந்த அனுபவமும் இல்லை என்று பலர் அவரை விமர்சித்தார்கள். ஆனால், மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். இது வெறும் தேர்தல் வெற்றி அல்ல; மாற்றத்தை விரும்பிய மக்களின் தீர்ப்பு."

பணம், சாதி, மதம் தாண்டிய வெற்றி: "இந்த முறை பொதுமக்கள் பணம், சாதி, மதம் என எல்லாவற்றையும் தாண்டி வாக்களித்துள்ளார்கள். எதையும் கண்மூடித்தனமாக மக்கள் நம்ப மாட்டார்கள் என்பதை இந்தத் தேர்தல் ஆணித்தரமாக நிரூபித்துவிட்டது."

நிறைவேறிய வாக்குமூலம்: “சினிமாவை விட்டுவிட்டு அவர் அரசியலுக்கு வந்தபோது, 'மக்கள் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்' என்று நான் கூறினேன். இன்று அது உண்மையாகிவிட்டது. அவர் சுயநலத்திற்காக வரவில்லை, பொதுநலத்திற்காகவே வந்துள்ளார்.” என சமுத்திர கனி குறிப்பிட்டார்.

45
அரசியல் நாகரிகம்

விஜய்யின் வெற்றியைப் புகழ்ந்த அதே வேளையில், தமிழக சட்டமன்றத்தில் மாற்றுக்குரல்களின் அவசியம் குறித்தும் சமுத்திரகனி தனது கருத்தைப் பதிவு செய்தார். “ சீமான், ஸ்டாலின் போன்ற முக்கிய தலைவர்களும் சட்டமன்றத்துக்குள் வந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்,” என அவர் கூறியது, அவரது முதிர்ச்சியான அரசியல் பார்வையையும், ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்த்துவதாக அமைந்தது.

55
கைதட்டல்களை பெற்ற சமுத்திரகனி

“மாற்றத்தை விரும்பும் ஒருவர் முதலில் தன்னிடமிருந்தே அந்த மாற்றத்தைத் தொடங்க வேண்டும் என்பதை முதல்வர் விஜய் நிரூபித்துள்ளார்” என்று சமுத்திரகனி முடித்த விதம் அரங்கிலிருந்த அனைவரின் கைதட்டல்களையும் பெற்றது. சமுத்திரகனியின் இந்தப் பேச்சு, விஜய்யின் அரசியல் பயணத்தின் ஆழத்தையும், அதன் பின்னணியில் உள்ள தனிப்பட்ட தியாகங்களையும் மக்களின் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

முதல்வர் விஜய் பயிர்க்கடன் தள்ளுபடி அறிப்பை வெளளியிட்டுள்ளது தொடர்பான கட்டுரையையும் படிக்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories