வடிவேல் பாலாஜி மரணத்திற்கு காரணம் இதுதான்?... கதறி அழும் தாயின் ஆவேச குற்றச்சாட்டு...!

First Published | Sep 11, 2020, 10:26 PM IST

சிகிச்சைக்கு பணமின்றி வடிவேல் பாலாஜி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரது தாயார் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். 

சின்னத்திரையில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்த வடிவேல் பாலாஜி நேற்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் கை, கால்கள் செயலிழந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து நேற்று ராஜீவ் காந்தி அரசு மருவத்துவமனைக்கு மாற்றப்பட்ட வடிவேல் பாலாஜி காலமானார்.
சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் வடிவேல் பாலாஜி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விஜய் தொலைக்காட்சியைச் சேர்ந்த ரோபோ சங்கர், சேது, பாலாஜி, புகழ் உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
Tap to resize

வடிவேல் பாலாஜியின் நீண்ட நாள் நண்பரான ராமர் தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுத காட்சிகள் காண்போர் கண்களை குளமாக்கியது.
இன்று காலை நடிகர் விஜய் சேதுபதி வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் அவருடைய பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்கு பணமின்றி வடிவேல் பாலாஜி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரது தாயார் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதில் பல தனியார் மருத்துவமனைகளில் லட்சங்களை செலவழித்து சிகிச்சை அளித்ததாகவும், ஆனால் அவர்கள் தங்களிடம் எவ்வித தகவலும் கொடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.
குறிப்பாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை தங்களிடம் இருந்து 10 லட்சம் வரை வாங்கிய போதும், 2 நாட்களில் குணமடைந்துவிடுவார் என பொய்யான நம்பிக்கை கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்.
இறுதி வரை வடிவேல் பாலாஜி உழைத்து சம்பாதித்த பணம் மற்றும் ஏரியா நண்பர்கள், உறவினர்கள் கொடுத்த பணத்தில் இருந்து மட்டுமே சிகிச்சை பெற்றதாகவும், அவர் சார்ந்த துறையிலிருந்து எந்த பிரபலமும் பண உதவி செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Latest Videos

click me!