நடிகர் விஜய்யின் ‘இந்த’ பிளாக்பஸ்டர் ஹிட் படம் முழுக்க முழுக்க பஹல்காமில் படமாக்கப்பட்டதா?

Published : Apr 24, 2025, 10:52 AM IST

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தளமாக இருந்து வரும் பஹல்காமில் நடிகர் விஜய் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படம் படமாக்கப்பட்டு உள்ளது. அது என்ன படம் என்பதை பார்க்கலாம்.

PREV
14
நடிகர் விஜய்யின் ‘இந்த’ பிளாக்பஸ்டர் ஹிட் படம் முழுக்க முழுக்க பஹல்காமில் படமாக்கப்பட்டதா?

Thalapathy Vijay's Blockbuster Movie Fully Filmed in Pahalgam : மினி ஸ்விட்சர்லாந்து என அழைக்கப்படும் காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தளமாக உள்ளது பஹல்காம். அங்கு தான் அண்மையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் காஷ்மீரில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அங்கு சுற்றுலாவுக்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகளும் தங்கள் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

24
Vijay Movie Filmed in Pahalgam

கப் சிப்னு ஆன காஷ்மீர்

கோடைக்காலத்தில் காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். ஆனால், இந்தத் தாக்குதல் சம்பவத்தால் அங்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை மளமளவென குறைந்திருக்கிறது. காஷ்மீருக்கு மக்கள் சுற்றுலா செல்வதற்கு முக்கிய காரணம் அதன் எழில் கொஞ்சும் அழகு தான். அதிலும் தாக்குதல் நடந்த பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு இடங்கள் உள்ளதாம். இந்த இடங்களில் ஏராளமான படங்களின் படப்பிடிப்பும் நடைபெற்று இருக்கிறது.

இதையும் படியுங்கள்... பஹல்காமில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடிய நிஜ ஹீரோ!

34
Leo Movie Fully Filmed in Pahalgam

பஹல்காமில் படமாக்கப்பட்ட விஜய் படம்

அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ஒன்று முழுக்க முழுக்க காஷ்மீரின் பஹல்காமில் தான் படமாக்கப்பட்டு இருக்கிறது. அந்த படத்தின் பெயர் லியோ. கடந்த 2023-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் தான் படமாக்கப்பட்டது. இதன் ஷூட்டிங்கிற்காக படக்குழு முழுவதும் சுமார் 2 மாதங்கள் காஷ்மீரில் தங்கி இருந்து படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். அதிலும் குறிப்பாக பஹல்காமில் தான் லியோ படத்தின் ஷூட்டிங்கை நடத்தி இருக்கிறார்கள்.

44
Manoj Paramahamsa X Post

மனோஜ் பரமஹம்சா எக்ஸ் பதிவு வைரல்

இந்த தகவலை லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பஹல்காம் தாக்குதல் சம்பவத்தால் மனமுடைந்து போன மனோஜ் பரமஹம்சா, லியோ படம் முழுக்க பஹல்காமில் தான் படமாக்கப்பட்டது. ஆனால் அந்த சிறிய அழகான நகரத்தை பற்றி இப்படி ஒரு சம்பவத்தை நான் நினைவில் வைக்க விரும்பவில்லை. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது என தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் மனோஜ் பரமஹம்சா.

இதையும் படியுங்கள்... பஹல்காம் தாக்குதல்: ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

Read more Photos on
click me!

Recommended Stories