'குக் வித் கோமாளி' புகழ் வந்ததால் நடந்த விபரீதம்! கடைக்கு சீல் வைத்ததால் பரபரப்பு!

விஜய் டிவி புகழ், கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்ற நிலையில், கொரோனா காலத்தில் உரிய அனுமதி பெறாமல், கடை திறப்பு விழா நடத்தியதாலும், புகழ் வருவதை அறிந்து அங்கு அளவுக்கு அதிகமான ரசிகர்கள் கூடியதாலும், காவலர்கள் அனைவரையும் விரட்டியடித்ததோடு, கடைக்கு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

விஜய் டிவியில், ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தற்போது 'குக் வித் கோமாளி' சீசன் 2 -ல் காமெடியால் கலக்கியவர் புகழ். இவரது பாடி லாங்குவேஜ் மற்றும் முகபாவனையை பார்த்தே பலர் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால் தற்போது, நடிகர் சந்தானம், சிவகார்த்திகேயன், அருண் விஜய், என அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

'குக் வித் கோமாளி' பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், பலர் இவர்களை கடை திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்து வருகிறார்கள். அந்த வகையில் புகழை திருநெல்வேலியில் உள்ள ஒரு செல்போன் கடையை திறந்து வைக்க அழைத்துள்ளனர். செல்போன் கடையை திறந்து வைப்பதற்காக நெல்லை வண்ணாரப்பேட்டையில் புகழும் சென்றுள்ளார். அப்போது புகழ் வருவதை அறிந்து, ரசிகர்கள் பலர் கடை முன் கூடிவிட்டனர்.
கொரோனா காலத்தில் மக்கள் கூட்டம் செல் போன் கடை முன் அதிக அளவில் கூடியதால், அங்கு போலீசார் விரைந்தனர். மேலும் உரிய மாநகராட்சியின் உரிய அனுமதி பெறாமல் கடை திறப்பு விழா நடத்துவதும் தெரியவந்தது. எனவே கடை முன் கூடிய ரசிகர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர். அதே அங்கு வந்த புகழையும் காரில் இருந்தபடியே போலீசார் பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
கொரோனா காலத்தில் மாநகராட்சியின் உரிய அனுமதியின்றி, இதுபோன்று கடை திறப்பு விழாவில் ஏற்பாடு செய்தாலும், புகழ் வருகையை அறிந்து ரசிகர்கள் அங்கு கூடியதாலும், கடை திறப்பு விழா அன்றே மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Latest Videos

click me!