லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் வெற்றியை அடுத்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்.
28
beast
தமிழ் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வரும் ஏப்ரல் 13-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளி வர உள்ளது.
38
beast
இரண்டு பாடல்கள் ஹிட்டை அடுத்து சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் ஆக்சன் காட்சிகள் தூள் பறந்துள்ளன.
ட்ரைலர் படி வீரராகவனாக வரும் விஜய் தீவிரவாதிகளால் ஹேஜேக் செய்யப்பட்ட மாலில் மாட்டிக்கொள்ளும் மக்களை அதிரடியாக காப்பாற்றும் சோல்ஜராக வந்துள்ளார்.
58
beast
இந்த ட்ரைலர் வெளியான கொஞ்ச நேரத்தில் பல சாதனைகளை படைத்து விட்டது. வலிமை ட்ரைலர் வெளியாகி 10 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்த நிலையில் பீஸ்ட் ட்ரைலர் 5 நிமிடத்தில் 1 மில்லியன் ரியல் டைம் பார்வையாளர்களை பெற்றது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
68
beast
துப்பாக்கி போன்று தீவிரவாதிகளுடன் போராடும் இந்த படம் குறித்த விமர்சனங்கள் ட்ரைலர் வெளியான உடனேயே ஆரம்பித்து விட்டது.
78
beast trailer
அந்த வகையில் பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுதாக கூறி படத்தை குவைத்தில் திரையிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.