மயக்க ஊசிக்கு பதில் ஆசிட்டை செலுத்திய மருத்துவர்..முகம் வீங்கி அலங்கோலமான பிரபல நடிகை

First Published Jun 20, 2022, 6:05 PM IST

நடிகை சுவாதியின் முகம் பலூன் போல் வீங்கி, அவர் கோர தோற்றத்துடன் காட்சியளிப்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. பல் மருத்துவரின் தவறான சிகிச்சை காரணமாகவே இவ்வாறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

swathi sathish

கன்னட நடிகை ஸ்வாதி சதீஷ் ரூட்  கேனல் அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல் ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். செயல்முறைக்குப் பிறகு, சுவாதியின் முகத்தின் வலது பக்கம் முழுவதுமாக வீங்கி, முழுமையாக அடையாளம் காண முடியாத அளவு மாறிவிட்டது.. இது ஒரு பொதுவான பக்க விளைவு என்றும், சில மணிநேரங்களில் வீக்கம் குறையும் என்றும் நடிகைக்கு அந்த நேரத்தில் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இருப்பினும், 20 நாட்களுக்குப் பிறகும், அவரது முகம் வீங்கியிருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார் ஸ்வாதி.

swathi sathish

பின்னர் ஸ்வாதியை பரிசோதித்த மருத்துவர்கள் பல் வேரை அகற்றினால் சரியாகிவிடும் எனக்கூறி அதற்காக சிகிச்சை அளித்துள்ளனர். இருந்தும் வீக்கம் குறையாத காரணத்தால் இது குறித்து விளக்கம் கேட்டபோது சரியான பதில் கிடைக்கவில்லை என சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார் ஸ்வாதி. மேலும் கிளினிக்கிற்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

Swathi Satish

சுவாதி சதீஷின் தற்போதைய நிலை அவரது கேரியரில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது  வர நடித்துள்ள படம் ஒன்று ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இருப்பினும், நடிகர் தனது உடல்நிலை காரணமாக பொது வெளியில் சென்று தனது படத்தை விளம்பரப்படுத்த முடியவில்லை. சுவாதி இப்போது முகத்தில் வீங்கிய நிலையில் வேறு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முகம் வீங்கியதற்கான ரிசன் தெரியவந்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் சுவாதிக்கு மயக்க ஊசிக்கு பதிலாக முகத்தில் உள்ள முகப் பருவை குணப்படுத்த பயன்படுத்தக் கூடிய சாலிசிலிக் ஆசிட்டை (Salicylic Acid)  மருத்துவர் செலுத்தியுள்ளது தெரியவந்தது.  இது தோலில் ஊடுருவி சென்று முகப் பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கும். அது போல் தோலில் அதிக எண்ணெய் உற்பத்தியை குறைக்கும். தோலில் உள்ள துளைகள் எப்போதும் திறந்திருக்க உதவும். இந்த தகவலி அடுத்து அந்த மருத்துவர் மீது  ஸ்வாதி புகார் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!