சினிமாவில் சிகரெட் பிடிக்க மறுத்த சிங்கம்! கையிக்கு வந்த பணத்தை துச்சமாக தூக்கியெறிந்த டி.ஆர்!

Published : Feb 26, 2026, 03:00 PM IST

திரையுலகில் பணத்தை விடப் பண்பே பெரிது என வாழ்ந்து காட்டியவர் டி. ராஜேந்தர். லட்சியத்திற்காகக் கோடிகளைத் தூக்கியெறிந்த அவரது நேர்மையான திரைப் பயணத்தைப் பற்றிக் காண்போம்.

PREV
15
பணத்தை விடப் பண்பே பெரிது

திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் புகழுக்காகவும் பணத்திற்காகவும் தங்கள் கொள்கைகளைத் தளர்த்திக்கொள்வது உண்டு. ஆனால், ஆரம்பக்காலத்திலேயே "பணத்தை விடப் பண்பே பெரிது" என நிரூபித்துக் காட்டியவர் கலைத்தாய் மகன் டி. ராஜேந்தர்.

25
கொள்கைக்காக நழுவவிட்ட பொன்னான வாய்ப்பு

தமிழ் சினிமாவின் மைல்கல் திரைப்படமான 'ஒரு தலை ராகம்' உருவான காலகட்டம் அது. அந்தப் படத்தில் நடிகர் சந்திரசேகர் ஏற்று நடித்த நாயகன் கதாபாத்திரத்தில், முதலில் நடிக்க வேண்டியவர் டி. ராஜேந்தர் தான். தயாரிப்பாளர் அவரிடம் வந்து அந்தப் பாத்திரத்தை விளக்கினார். ஆனால், ஒரு நிபந்தனை - அந்த நாயகன் சிகரெட் பிடிக்கும் பழக்கம் கொண்டவர். நிஜ வாழ்க்கையில் எந்தத் தீய பழக்கமும் இல்லாத டி.ஆர், "திரையிலும் நான் சிகரெட் பிடிக்க மாட்டேன், அது இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும்" என்று கூறி அந்த வாய்ப்பை அதிரடியாக மறுத்தார்.

35
ஏலம் போன சம்பளம்; அசையாத டி.ஆர்

தயாரிப்பாளர் அவரை விடவில்லை. எப்படியாவது சம்மதிக்க வைக்கப் பணத்தை வாரி இறைக்கத் துணிந்தார். அப்போது டி.ஆரின் சம்பளம் வெறும் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஆனால், தயாரிப்பாளர் 10,000 ரூபாயில் தொடங்கி, ஏலம் விடுவதைப் போலத் தொகையை உயர்த்தி, இறுதியில் 1 லட்சம் ரூபாய் வரை தருவதாக ஆசை காட்டினார்.அன்றைய காலகட்டத்தில் ஒரு லட்சம் என்பது மிகப்பெரிய தொகை. எளிய நிலையில் இருந்த எவரும் மயங்கக்கூடிய அந்தத் தொகையை டி.ஆர் துச்சமாக மதித்தார்.

45
லட்சியமா? லட்சமா?

அந்தத் தருணத்தில் அவர் உதிர்த்த புகழ்பெற்ற வசனம்: "நான் லட்சியத்துக்காக வாழ்கிறேன், லட்சத்துக்காக அல்ல!" பணத்தை விடத் தனது நேர்மையே முக்கியம் என்தேயாகும். பிற்காலத்தில் அவர் இயக்கிய, நடித்த படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்று, அவரது கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாக அமைந்தன.

55
லட்சியமே லட்சியம்!

பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், ஆனால் டி. ராஜேந்தரின் லட்சியத்தின் முன்னால் அந்தப் பணம் மண்டியிட்டது. வெறும் சில ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த போதே, ஒரு லட்சம் ரூபாய் ஆசையைத் துச்சமாக மதித்த அவரது உறுதி ஈடு இணையற்றது. இன்றைய காலக்கட்டத்தில் புகழுக்காகவும், பணத்திற்காகவும் எதையும் செய்யத் துணிவோர் மத்தியில், "திரையில் கூடத் தவறான முன்னுதாரணமாக இருக்க மாட்டேன்" என்ற டி.ஆரின் நேர்மை ஒரு பாடமாகும். அன்று அவர் காட்டிய அந்த உறுதிதான், இன்று வரை அவரை ஒரு தனித்துவமான கலைஞனாக மக்கள் மத்தியில் கம்பீரமாக நிலைநிறுத்தியுள்ளது. "கோடிகள் வந்து குவிகின்ற போதும், கொள்கையை விடாதவனே உண்மையான கலைஞன்" என்பதற்கு டி. ராஜேந்தர் ஒரு மிகச்சிறந்த உதாரணம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories