சீரியல் நடிகையை கொலை செய்ய துடிக்கும் காதலனின் தந்தை..! முன்னாள் கணவர் போலீசில் பரபரப்பு புகார்..!

Published : Oct 29, 2021, 11:14 AM IST

சின்னத்திரை சீரியல் நடிகர் ஈஸ்வரின் (Ishwar) முன்னாள் மனைவியை, அவரது காதலனின் தந்தை கொலை செய்து விடுவதாக கூறி வருவதாகவும், எனவே அவருக்கு ஏதேனும் நேர்ந்தால்... தனக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.  

PREV
17
சீரியல் நடிகையை கொலை செய்ய துடிக்கும் காதலனின் தந்தை..! முன்னாள் கணவர் போலீசில் பரபரப்பு புகார்..!

கடந்த வருடம் டிவி, சோசியல் மீடியா என அனைத்திலும் அதிகம் பேசப்பட்ட விஷயம் சீரியல் தம்பதி ஜெயஸ்ரீ - ஈஸ்வர் பஞ்சாயத்து தான்.

 

27

தன்னுடைய கணவர் ஈஸ்வருக்கும் அவருடன் சீரியலில் நடிக்கும் மகாலட்சுமிக்கும் கள்ளக்காதல் இருப்பதாக கூறி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார் ஜெயஸ்ரீ. அதற்காக தனது மாமியார், ஈஸ்வர் உள்ளிட்டோர் தன்னை வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்துவதாகவும் போலீசில் புகார் அளித்தார்.

 

37

இதையடுத்து கைது செய்யப்பட ஈஸ்வரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் மூவர் தரப்பில் இருந்து மாற்றி, மாற்றி புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்று, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறினார்.

 

47

இதனை தனது ரசிகர்களுக்கு அறிவிக்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் ஐம் பேக் என்ற கேப்ஷனுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் கணவர் ஈஸ்வரை விட்டு பிரிந்து வாழ்த்து வரும் ஜெயஸ்ரீ, அவருடைய துணை இல்லாமல் மகளை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக தனது நடன பள்ளியை மீண்டும் தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

57

இந்நிலையில், திடீர் என ஈஸ்வர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மீண்டும் இவர்களது விவகாரம் பற்றி பேச வைத்துள்ளது.

 

67

ஜெயஸ், அவரது முன்னாள் கணவர் ஈஸ்வர் வசித்து வரும்... திருவான்மியூரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், மருத்துவர் ராகவேஷ் என்பவருடன் ஒன்றாக வசித்து வருவதாகவும், இவர்கள் சேர்ந்து வாழ்ந்து  வரும் வாழ்க்கை, ராகவேஷின் தந்தைக்கு பிடிக்கவில்லை. எனவே இதுகுறித்து ஜெயஸ்ரீயிடம் நேரடியாக கூறியும் அதனை அவர் கண்டு கொள்ளாததால், ஜெயஸ்ரீ மீது காரை ஏற்றி கொலை செய்து விடுவேன் என தன்னிடம் கூறியதாக அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

 

 

77

தொழிலதிபரும், சினிமா தயாரிப்பாளரான ராகவேஷின் தந்தை சண்முகம் அவர்கள் இருவரும், ஒன்றாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை தன்னிடம் காண்பித்து புலம்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயஸ்ரீக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்காகவே, முன்னெச்சரிக்கையாக இந்த புகாரை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.தற்போது ஜெயஸ்ரீ - ஈஸ்வர் ஆகியோரின் விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

click me!

Recommended Stories