ஜன நாயகன் படத்தின் புது ரிலீஸ் தேதி இதுவா? மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதல்..!

Published : Feb 06, 2026, 03:39 PM IST

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி இருக்கும் ஜன நாயகன் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த லேட்டஸ்ட் தகவல் கசிந்துள்ளது.

PREV
15
Jana Nayagan New Release Date

கோலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக நீண்ட காலமாக ரசிகர்களை கவர்ந்து வரும் தளபதி விஜய், தற்போது முழுவதுமாக அரசியல் பாதையில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால், அவரது நடிப்பில் வெளியாகவுள்ள “ஜன நாயகன்” திரைப்படமே கடைசி படமாக இருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

25
விஜய்யின் ஜன நாயகன்

இந்த படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ளார். கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். பெண் பாதுகாப்பு மற்றும் அரசியல் பின்னணியை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் கவனம் பெற்றுள்ளன.

35
சிக்கலில் ஜன நாயகன்

முதலில், 2026ம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக, சென்சார் தொடர்பான சிக்கல்கள் காரணமாக அந்த ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்த பிரச்சனை இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், படக்குழு தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறலாம் என்ற தகவல்கள் சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனால், படத்தின் வெளியீடு எப்போது என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

45
ஜன நாயகன் புது ரிலீஸ் தேதி

இந்நிலையில், வெளிநாட்டில் செயல்படும் “சினி வேர்ல்ட்” என்ற லண்டன் அடிப்படையிலான டிக்கெட் விநியோக நிறுவனம், ஜன நாயகன் திரைப்படம் பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, தளபதி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள தாய்க்கிழவி படமும் பிப்ரவரி 20ந் தேதி தான் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

55
விரைவில் வரும் அறிவிப்பு

ஆனால், இந்த புதிய ரிலீஸ் தேதி குறித்து ஜன நாயகன் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்த தகவல் உண்மையாகி விட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் தங்களது கருத்துகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். விரைவில் படத்தின் சரியான வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ஒட்டுமொத்த தளபதி ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories