மாநிலம் கடந்தும் “மாஸ்டர்” ராஜ்ஜியம்... நடிகர் விஜய்க்கு சிலை வைத்து கொண்டாடும் கர்நாடக ரசிகர்கள்...!

First Published Jan 19, 2021, 7:31 PM IST

மாஸ்டர் கெட்டப்பில் இருக்கும் விஜய்க்கு சிலை வைத்து கர்நாடக ரசிகர்கள் அந்த படத்திற்கு வேற லெவலுக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 13ம் தேதி வெளியானது. தியேட்டர்களில் முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, மத்திய அரசின் வலியுறுத்தலின் பேரில் மீண்டும் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பை வெளியிட்டது.
undefined
இதனால் முதலில் விஜய் ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், தற்போதைய நிலவரப்படி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாஸ்டர் திரைப்படம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
undefined
காரணம் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றாலும், ரசிகர்களின் ஏகபோக வரவேற்பால் திரையரங்குகள் திண்டாடி போய்விட்டன. என்ன தான் படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும், வசூல் ரீதியாக வெளுத்து வாங்கியுள்ளது.
undefined
கடந்த வார இறுதியில் மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக உலக அளவில் நெம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. தற்போது மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் 23 மில்லியன் டாலர் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.
undefined
தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு இப்படியொரு கொண்டாட்டமான சூழ்நிலையை கொடுத்ததால் மாஸ்டர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கூடியுள்ளது.
undefined
தமிழகத்தை கடந்து அண்டை மாநிலமான கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகாவிலும் விஜய்க்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் கர்நாடக ரசிகர்கள் செய்துள்ள வெறித்தனமான காரியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
மாஸ்டர் கெட்டப்பில் இருக்கும் விஜய்க்கு சிலை வைத்து கர்நாடக ரசிகர்கள் அந்த படத்திற்கு வேற லெவலுக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர்.
undefined
முதல் முறையாக கர்நாடகாவில் தளபதி விஜய்க்கு வைக்கப்பட்டுள்ள சிலையின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
click me!