ரசிகர்களுக்கு ஏமாற்றம் – ஜன நாயகன் இசை வெளியீடு எப்போது? எங்கு நடக்கிறது தெரியுமா?

Published : Nov 21, 2025, 06:47 PM IST

Jana Nayagan Audio Launch Date and Place Announced : விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீடு குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

PREV
17
பொங்கல் ரிலீஸ்:

தளபதி விஜய் ரசிகர்களுக்கு, 2026 ஆம் ஆண்டு பொங்கல் தளபதி பொங்கலாக அமைய உள்ளது மகிழ்ச்சியான செய்தி என்றாலும், இது தான் தளபதிக்கு கடைசி படம் என்கிற உண்மையையும் ரசிகர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதாவது தளபதி விஜய், முழு நேர அரசியல்வாதியாக மாறிய நிலையில் சினிமாவிலிருந்து விலக முடிவு செய்தார். அதன்படி தற்போது நடித்துள்ள படமே கடைசி படம் என்று ஏற்கனவே கூறியுள்ளார். அரசியல் வருகையைத் தொடர்ந்து சினிமாவிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.

27
பகவத் கேசரி ரீமேக்:

தளபதி விஜய் நடித்து முடித்திருக்கும், 'ஜன நாயகன்' திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கி உள்ளார். இந்த படம், பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பகவத் கேசரி' திரைப்படத்தின் ரீ-மேக்காக உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான முதல் சிங்கிள் பாடல் மூலம் இந்த தகவல் கிட்ட தட்ட உறுதியாகி உள்ளது. அதே போல் 'பகவத் கேசரி' படத்தின் உரிமையை 'ஜன நாயகன்' படக்குழு பல கோடி பணம் கொடுத்து வாங்கி வைத்துள்ளது.

37
ரசிகர்கள் மத்தியில் நிலவும் எதிர்பார்ப்பு:

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகும் இந்த படத்தில், தளபதிக்கு ஜோடியாக பூஜா ஹேக்டே நடித்துள்ளார். இவர் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் படம் இதுவாகும். மேலும் மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், பிரியா மணி, வரலட்சுமி சரத்குமார், ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

47
ஜனநாயகன் படத்தை கைப்பற்ற தீவிரம்:

KVN நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதால், தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதே போல் இந்த படத்தின் உரிமைகளை கைப்பற்றுவதில் முன்னணி நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

57
ரிலீசுக்கு முன்பே கோடிகளில் வசூல்:

இந்த நிலையில் தான், 'ஜன நாயகன்' ப்ரீ பிஸ்னஸ் மூலமாக மட்டுமே ரூ.325 கோடிக்கு வெயிட்டாக கல்லா கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தமிழக திரையரங்க உரிமை ரூ.100 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை ரூ.80 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ.35 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இதை தவிர 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ரூ.110 கோடிக்கு அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. தளபதியின் கடைசி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பை பார்த்து, இப்படம் ரூ.1000 கோடி கல்லா கட்டும் என அடித்து கூறி வருகின்றனர் திரையுலக வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.

67
தளபதி கச்சேரி:

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் பாடலான தளபதி கச்சேரி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் பாடலைத் தொடர்ந்து ஜன நாயகன் படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் குறித்த பாடலும் வெளியாக இருக்கிறது.

77
ஜன நாயகன் இசை வெளியீடு:

இந்த நிலையில் தான் படக்குழுவினர் ஜன நாயகன் படம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், வரும் டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீடு நடக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மிடில் வயதில் விஜய் நடிப்பில் வெளியான படங்களின் தொகுப்பு கொண்டு வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளது. மலேசியாவில் ஜன நாயகன் இசை வெளியீடு நடக்க இருப்பதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories