பட்டு வேஷ்டி சட்டையில் மணமக்களை வாழ்த்திய தளபதி விஜய் – தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்!

Published : Dec 07, 2025, 11:43 AM IST

Thalapathy Vijay at Producer T Siva Daughter Wedding Reception : தயாரிப்பாளர் சிவாவின் மகள் திருமண நிகழ்ச்சியில் தளபதி விஜய் பட்டு வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

PREV
15
Vijay Spotted At Producer T Siva Daughter Wedding Reception

தளபதி விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படம் வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படம் தான் அவரது கடைசி படம். அரசியலில் களமிறங்கிய விஜய் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால், அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் ஜன நாயகன் படமே கடைசி படமாக பார்க்கப்படுகிறது. வரும் 27ஆம் தேதி ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற இருக்கிறது.

25
Producer T Siva Daughter Marriage

இந்த நிகழ்ச்சியை விஜய்யின் ஃபேர்வெல் பார்ட்டியாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான தளபதி கச்சேரி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் 2ஆவது சிங்கிள் டிராக் குறித்த அப்டேட் இன்னும் ஓரிரு நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

35
Jana Nayagan, Tamilaga Vettri Kazhagam

இந்த நிலையில் தான் விஜய், தயாரிப்பாளர் டி சிவாவின் மகள் டாக்டர் தக்‌ஷிணாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சொல்வதெல்லாம் உண்மை, பூந்தோட்ட காவல்காரன், பாட்டுக்கு ஒரு தலைவன், தெய்வ வாக்கு, சரோஜா, அரவிந்தன், மரியாதை, கனிமொழி, அரவாண், பார்ட்டி, சார்லி சாப்ளின் 2 என்று பல படங்களை தயாரித்துள்ளார்.

45
Thalapathy Vijay attend Producer T Siva Daughter Wedding Reception

அதோடு தூண்டில், வாழ்த்துக்கள், பாயும் புலி, லத்தி, அநீதி, பரம்பொருள், கோட் என்று பல படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இந்த நிலையில் தான் இவரது மகள் டாக்டர் தக்‌ஷிணா சிவாவிற்கும் டாக்டர் சந்தீப் பிரபாகரனுக்கும் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி தஞ்சாவூரில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.

55
Thalapathy Vijay

இதைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை திருமண மஹாலில் தக்‌ஷிணா மற்றும் சந்தீப் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகரும், தமிழக வெற்றிக் கழத்தின் தலைவருமான தளபதி விஜய் கலந்து கொண்டுள்ளார். இதில் அவர் பட்டு வேஷ்டியில் கலந்து கொண்டு மணமக்களை பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். மேலும், அவரது காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories