பராசக்தியை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய ஜீவா படம்... வாஷ் அவுட் ஆன வா வாத்தியார் - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

Published : Jan 19, 2026, 10:41 AM IST

பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன வா வாத்தியார், பராசக்தி மற்றும் தலைவர் தம்பி தலைமையில் ஆகிய மூன்று திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Pongal Release Movies Box Office Report

பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை வந்ததால் இதில் நன்கு வசூல் அள்ளிவிடலாம் என்கிற கனவில் விஜய்யின் ஜனநாயகன் படம் இருந்தது. இதற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் மட்டுமே திரைக்கு வர இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. அதற்கு பதிலாக வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில் ஆகிய படங்கள் பொங்கல் ரேஸில் களமிறங்கின. இந்த மூன்று படங்களில் எந்த படம் சன்டே பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

24
வா வாத்தியார் வசூல்

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த ஜனவரி 14ந் தேதி திரைக்கு வந்த படம் வா வாத்தியார். பல தடைகளை தாண்டி ரிலீஸ் ஆன இப்படம் வசூல் சாதனை என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. இந்த பொங்கல் ரேஸில் படுதோல்வியை சந்தித்த படம் வா வாத்தியார் தான். இப்படம் 40 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வசூலில் 10 கோடியை கூட தாண்டவில்லை. இப்படம் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்றே தமிழ்நாட்டில் வெறும் ரூ.66.45 லட்சம் மட்டுமே வசூலித்திருந்தது.

34
பராசக்தி பாக்ஸ் ஆபிஸ்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா, காளி வெங்கட், ராணா டகுபதி, பேசில் ஜோசப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம் பராசக்தி. இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும், மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது. இப்படம் சுமார் 140 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதன் வசூல் 8 நாட்களில் வெறும் ரூ.76 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. நேற்று தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ.2.40 கோடி வசூல் செய்திருந்தது. இது முந்தைய நாள் வசூலைக் காட்டிலும் 40 சதவீதம் குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

44
தலைவர் தம்பி தலைமையில் வசூல் நிலவரம்

2026-ம் ஆண்டு பொங்கல் ரேஸில் ரியல் வின்னர் என்றால் அது ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் தான். இப்படம் லேட்டாக ரிலீஸ் ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் கில்லி மாதிரி சொல்லி அடித்து வருகிறது. இப்படம் வெறும் 10 கோடி பட்ஜெட்டில் உருவானது. ரிலீஸ் ஆன மூன்று நாட்களிலேயே 11 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய இப்படம், நான்காவது நாளான நேற்று தமிழ்நாட்டில் ரூ.4.34 கோடி வசூல் செய்திருந்தது. பராசக்தி படத்தைக் காட்டிலும் டபுள் மடங்கு வசூல் அள்ளி சாதனை படைத்துள்ளது இப்படம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories