சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான தல தோனி இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். அவர் விஜய்யை சந்தித்து பேசிய புகைப்படங்கள் தாறுமாறாக ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்களோடு #ThalapathyVijay
#WhistlePodu, Gokulam Studios ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.