தளபதியை அடுத்து தல அஜித் படத்திற்கும் சிக்கல்... அதிரடி முடிவை ஆலோசித்து வரும் ‘வலிமை’ படக்குழு...!

Published : Apr 21, 2021, 04:28 PM ISTUpdated : Apr 21, 2021, 04:42 PM IST

வலிமை படக்குழுவிற்கு ஏற்பட்டுள்ள திடீர் சிக்கல் தல அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PREV
17
தளபதியை அடுத்து தல அஜித் படத்திற்கும் சிக்கல்... அதிரடி முடிவை ஆலோசித்து வரும் ‘வலிமை’ படக்குழு...!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித்தின் 60வது படமாக தயாராகி வரும் இதில், அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரில்லை ஜோடியாக 'காலா' பட நடிகை ஹீமோ குரோஷி நடித்துள்ளார். 
 
27

அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விதவிதமாக ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து அப்டேட் கேட்டு வந்தனர்.  தல ரசிகர்கள், வலிமை அப்டேட்டிற்காக  செய்த அட்டகாசத்தை சொல்லி அடங்காது,  பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்செந்தூர் முருகன், பாரத பிரதமர் மோடி என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்டு கூச்சலிடும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
 
37

ரசிகர்களின் செயலால் பொறுமை இழந்த தல அஜித், நானும் தயாரிப்பாளரும் இணைந்து அப்டேட்டை வெளியிடும் வரை பொறுமை காக்கும் படியும், பொது இடத்தில் கண்ணியம் தவறாமல் நடந்து கொள்ளும் படியும் அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு பல நாட்கள் இழுத்தடித்த போனிகபூர், அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அறிவித்து தல ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினார்.

47

சமீபத்தில் வலிமை படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டாக தமிழக தியேட்டர் உரிமை விற்பனை பற்றிய அசத்தலான தகவலை போனிகபூர் தெரிவித்திருந்தார். அதன் படி ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மற்றும் மதுரை கோபுரம் சினிமாஸ் ஆகியோர் தமிழக திரையரங்குகளில் வலிமை படத்தை வெளியிட உள்ளனர். 
 
57

இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டது. ஒரேயொரு கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இந்தக் காட்சியை ஸ்பெயினில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதும் மீண்டும் வேகமெடுத்துள்ள கரோனா பரவலால், பல நாடுகள் பிற நாட்டினர் வருகைக்கு தடை விதித்துள்ளன. இதனால், ஸ்பெயினில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

67

எனவே மீதமுள்ள காட்சிகளையும் இந்தியாவிலேயே எடுத்து முடித்துவிடலாமா? என்ற யோசனையில் வலிமை படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனராம். 
 
77

பெரும்பாலான காட்சிகளை ஜார்ஜியாவில் எடுக்க திட்டமிட்டு சென்ற தளபதி 65 படக்குழுவினருக்கு தற்போது கடும் சிக்கலில் மாட்டியுள்ளது. ஜார்ஜியாவில் தற்போது கடும் குளிரும், மழையும் பெய்து வருவதால் படப்பிடிப்பை முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு காட்சிகளை மட்டுமே படமாக்க முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories