சினிமா பிரபலங்களின் தற்கொலை எப்போதுமே சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. பாலிவுட்டில் கடந்த 2020-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு இன்றளவும் யார் காரணம் என்பது புரியாத புதிராக உள்ளது. அதேபோல் தமிழ் நாட்டில் சின்னத்திர சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலைக்கும் என்ன காரணம் என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை.
24
அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா என்பவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 33 வயதாகும் இவர் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்து வந்தார். விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்ட சுதீர் வர்மா, எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அவருக்கு சமீப காலமாக சினிமா வாய்ப்புகள் சரிவர கிடைக்காமல் இருந்து வந்ததாகவும், நல்ல வாய்ப்புகளுக்காக சில காலம் போராடியும் எதுவும் கிடைக்காததால் மன உளைச்சலில் இந்த தற்கொலை முடிவை அவர் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவருடன் பணியாற்றியவர்களிடமும் விசரணை நடத்தப்பட்டு வருகிறது.
44
சுதீர் வர்மாவின் மறைவு தெலுங்கு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சுதீர் வர்மாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.