மகனின் படத்தை பார்த்து நெகிழ்ந்து போன முதலமைச்சர்..நேற்று இரவு நடந்த மாஸ் சம்பவம்!

Kanmani P   | Asianet News
Published : May 16, 2022, 07:54 PM IST

நேற்று இரவு ‘நெஞ்சுக்கு நீதி' படத்தைப் பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்..

PREV
16
மகனின் படத்தை பார்த்து நெகிழ்ந்து போன முதலமைச்சர்..நேற்று இரவு நடந்த மாஸ் சம்பவம்!
NenjukuNeedhi

சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் ஆர்டிக்கிள் 15 என்கிற இந்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.  வருகிற மே 20-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில்  நடைபெற்றது.

26
NenjukuNeedhi

இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கருப்பன் பட நடிகை தன்யா நடித்துள்ளார்.மேலும் மயில்சாமி, சரவணன், ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ், இசையில் உருவாகும் இந்த படத்திற்கு, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

36
NenjukuNeedhi

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக நடைபெற்று வரும் சமூக ரீதியான பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்குப்படுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தின்  காட்சிகள் பீஜியம் மனதை வருடும் விதமாக இருந்து வருகிறது. 

46
NenjukuNeedhi

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக உதயநிதி, நீதிக்காக போராடும் காவலராக நடித்து அசத்தியுள்ளார்..  இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

56
NenjukuNeedhi

கடந்த இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி இருந்தது. அதன்படி ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்ற புகைப்படங்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

66
NenjukuNeedhi

இந்நிலையில் நேற்று இரவு நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்து கூறிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories