சூர்ய கிரண், குழந்தை நட்சத்திரமாக திரையுலகத்தில் அறிமுகமானவர். இவர் பிரபல சீரியல் நடிகை சுஜிதாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஜிதா தன்னுடைய சகோதரர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர், பேட்டி ஒன்றில், தான் பட்ட கஷ்டங்கள் மற்றும் மனைவியை விவாகரத்து செய்த சூழல் குறித்தும் முதல் முறையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
சூர்யா கிரண் தமிழில் கண்ணுக்குள் நிலவு, சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை காவேரியை திருமணம் செய்துகொண்டார்.
பின்னர் திருமணம் ஆன சில வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
தன்னுடைய விவாகரத்து பற்றி பேசியுள்ள சூர்யா கிரண், வாழ்க்கையில் வெற்றியை பார்த்த பிறகு தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
வீட்டை ஜப்தி பண்ணாங்க, காரை எடுத்துக்கிட்டாங்க, மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றதாக கூறியுள்ளர்.
அந்த சமயத்தில் தனக்கு விபத்தும் நேர்த்ததாகவும், அணைத்து கெட்ட நேரங்களும் ஓரே சமயத்தில் தன்னை ஆட்டி படைத்ததாக கூறியுள்ளார் சூர்ய கிரண்.