Karuppu First Single God Mode Lyric Video Released : ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் தான் கருப்பு. மூக்குத்தி அம்மன் படத்திற்கு பிறகு ஆர் ஜே பாலாஜி ஆன்மீக கதையை இயக்கி வருகிறார். ஆம், இந்தப் படத்திற்கு காவல் தெய்வமாக விளங்க கூடிய கருப்பசாமியின் பெயரான கருப்பு என்று இந்தப் படத்திற்கு டைட்டில் வைத்துள்ளார். இந்தப் படத்தில் சூர்யா, த்ரிஷா, நட்டி, சுவாசிகா, யோகி பாபு, ஆர் ஜே பாலாஜி (சிறப்பு தோற்றம்), சுப்ரீத் ரெட்டி ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.
26
சாய் அபயங்கார்
சாய் அபயங்கார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ் ஆர் பிரபு இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் தான் இந்த தீபாவளி பண்டிகைக்கு எந்த மாஸ் ஹீரோவின் படமும் வெளியாகாத நிலையில் சூர்யாவின் கருப்பு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து கொடுத்துள்ளது.
36
கருப்பு முதல் சிங்கிள் பாடல் வரிகள்
சரவெடி என்று தொடங்கும் இந்தப் பாடல் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் தொடர்ந்து வெளியிட்டு வந்த நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு படக்குழுவினர் கருப்பு பாடல் லிரிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலின் இடையில் கருப்பு பாடல் மேக்கிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. பாடல் வேகமாக பாடப்படுவதால் பாடல் வரிகளை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
எனினும் பாடலும் பாடலுக்கு சூர்யா டான்ஸ் ஆடும் காட்சிகளும் அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி இன்று தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் விருந்தாக அமைந்துள்ளது. இதோ கருப்பு முதல் சிங்கிள்:
சரவெடி ஆயிரம் பத்தணுமா
சுருட்டொரு லாரியா கொட்டட்டுமா
உருமிய உருஞ்சு தள்ளட்டுமா
கெடாகறி நெத்திலி வஞ்சரமா
படையல நெறப்பி தள்ளட்டுமா...
56
கருப்பு பாடல் வரிகள்
இது காட் மாடு
ஓசையே நிக்காது
கார பத்தும்
ஜன மொத்தம் என்று இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளது. மேலும், சூர்யாவின் கருப்பு முதல் பாடலுக்கு விஷ்ணு எடவன் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.
சாய் அபயங்கர் மற்றும் கானா முத்து இருவரும் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர். இனி கருப்பு படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்கள் கொடுத்த எதிர்மறை விமர்சனங்களுக்கு பிறகு கருப்பு சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.