Dude Box Office Collection Day 3 Report : காலத்திற்கு ஏற்ப கதைகளும் காட்சிகளும் மாறி வரும் இன்றைய சினிமா உலகில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம் 3 நாட்களில் எத்தனை கோடி வசூல் குவித்திருக்கிறது என்று பார்க்கலாம்.
கோமாளி படம் மூலமாக தன்னை இயக்குநராக அறிமுகம் செய்த பிரதீப் ரங்கநாதன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி நடித்து வெளியான படம் தான் லவ் டுடே. பட்ஜெட் கம்மி ஆனால், வசூல் அதிகம் என்று சொல்லும் அளவிற்கு ரூ.5 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது. இந்தப் படத்திற்கு பிறகு தொடர்ந்து நடிகராக நடித்து வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்து வெளியான படம் தான் டிராகன்.
25
டியூட் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இந்தப் படமும் வசூலில் தாறுமாறாக கல்லாகட்டியது. ரூ.150 கோடி வரையில் டிராகன் படம் வசூல் குவித்து சிறந்த படம் என்ற சாதனையையும் படைத்தது. இப்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் டியூட். முழுக்க காதல், செண்டிமெண்ட் காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். சரத்குமார், ரோகிணி, மமிதா பைஜூ, பிரதீப் ரங்கநாதன், நேகா ஷெட்டி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி டியூட் படம் திரைக்கு வந்தது. பொதுவாக பிரதீப் ரங்கநாதன் படம் என்றாலே வித்தியாசமான கதை, கான்செப்ட் என்று ஏதாவது ஒன்று இருக்கும். அப்படித்தான் இந்தப் படமும் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது. ரூ.30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் கதை காதலிப்பது ஒருவன், திருமணம் செய்து கொள்வது இன்னொருவன் என்று வித்தியாசமான கதையாக இருந்தாலும் இந்த கதையெல்லாம் பழசு தா. ஆனால், காலத்திற்கு ஏற்ற வகையில் இயக்கி அதனை வெளியிட்டு ஹிட்டும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
45
கீர்த்தீஸ்வரன், மமிதா பைஜூ
அதாவது காதலித்தவனுடன் பழகி அவன் மூலமாக கர்ப்பமாகி பின்னர் இன்னொருவனை திருமணம் செய்து கொண்டு இறுதியாக காதலித்தவனுடன் சேர்வது என்பது இன்றைய காலத்திற்கு ஓகே என்றாலும் இது பழைய கதை. இது போன்று பல படங்கள் நம் தமிழ் சினிமாவிலே வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் தான் படம் வெளியான முதல் நாளில் சாக்னிக் அறிக்கையின்படி ரூ.9.75 கோடி வசூல் குவித்தது. 2ஆவது நாளில் தமிழ் மற்றும் தெலுங்கில் முறையே ரூ.7.4 கோடி மற்றும் தெலுங்கில் ரூ.2.9 கோடி உள்பட மொத்தமாக ரூ.10.3 கோடி வசூல் குவித்தது.
55
டியூட் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இந்த நிலையில் தான் 3ஆவது நாளில் மட்டும் ரூ.10.50 கோடி வசூல் குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக இந்திய அளவில் ரூ.30.35 கோடி வசூல் எடுத்துள்ளது என்று சாக்னிக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், விக்கிப்பீடியா பக்கத்தில் ரூ.45 கோடி வசூல் எடுத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.