அப்பாவுக்கு டாக்டர் பட்டம் – உருக்கமாக பதிவு வெளியிட்ட அண்ணன், தம்பி!

Published : Nov 30, 2025, 01:05 PM IST

Suriya Karthi Share Heartfelt Post Father Sivakumar Doctorate : நடிகர் சிவக்குமாருக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் உருக்கமாக பதிவு வெளியிட்டுள்ளனர்.

PREV
15
நடிகர் சிவக்குமாருக்கு முனைவர் பட்டம்

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் சிவக்குமார். கடந்த 1965 ஆம் ஆண்டு திரைக்கு வந்த காக்கும் கரங்கள் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து மோட்டார் சுந்தரம் பிள்ளை, தாயே உனக்காக, சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, காவல்காரன், திருமால் பெருமாள், பணமா பாசமா என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்தார். ஒரு சில பக்தி படங்களிலும் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டினார்.

25
நடிகர் சூர்யா உருக்கமான பதிவு

கடைசியாக கடந்த 2001 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அஜித் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து விலகிய சிவக்குமார் இப்போது சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் சிவக்குமார் நடித்துள்ளார். இப்போது அவருக்குப் பதிலாக அவரது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சினிமாவில் ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர். மருமகள் ஜோதிகாவும் சினிமாவில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.

35
சிவக்குமார்

இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவக்குமாருக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் நடிகர் சிவக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

45
கார்த்தி உருக்கம்

தனது அப்பாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். அதில், ஒரு நடிகராக பல தலைமுறைகளை கவர்ந்ததோடு ஓவியக் கலை மீது கொண்ட பேராதரவும் அப்பாவின் வாழ்க்கையை தனித்துவமாக்கியது. அவரது கலைச்சேவையை பெருமைப்படுத்தும் விதமாக கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது எங்களுக்கு மகிழ்வை தருகிறது. இந்த அங்கீகாரம் அவரது ஆழ்ந்த உழைப்புக்கும் கலை இலக்கிய ஈடுபாட்டிற்கும் கிடைத்த மரியாதை என்று பதிவிட்டுள்ளார்.

55
சிவக்குமாருக்கு டாக்டர் பட்டம்

இதே போன்று நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒரு ஓவியராக தனது வாழ்வை தொடங்கியவர் என் அப்பா. ஒரு பள்ளியில் தொடங்கும் கோடு எவ்வளவு நுட்பமாக ஓவியமாக மாறுகிறதோ அதைப் போலவே தனது வாழ்வையும் நெறியையும் நேர்த்தியாக வகுத்துக் கொண்டவர். அவரது உழைப்பு, உறுதி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை நான் எனக்கான பாடமாக கொள்கிறேன். அப்பாவின் 60 ஆண்டுகால பயணம் தமிழ் சமூகத்திற்கு பயன்பட்டிருப்பதன் அங்கீகாரமாக இந்த முனைவர் பட்டத்தை கருதுகிறோம் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories