அடுத்த கே.ஜி.எப் ‘தங்கலான்’... அடுத்த பாகுபலி ‘கங்குவா’ - 2 படத்தோட பட்ஜெட் எவ்வளவுனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

First Published | Jul 27, 2023, 4:20 PM IST

விக்ரம் நடிக்கும் தங்கலான் மற்றும் சூர்யா நடிக்கும் கங்குவா ஆகிய இரண்டு பிரம்மாண்ட படங்களின் பட்ஜெட் விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடிக்கக்கூடிய நடிகர்கள் என்றால் அது சூர்யாவும், விக்ரமும் தான். தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்கள் இருவரும் தற்போது இரு பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகின்றனர். அந்த இரண்டு படங்கள் தான் தங்கலான் மற்றும் கங்குவா. இந்த இரண்டு திரைப்படங்களையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

இதில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமான இதில் வில்லனாக நட்டி நட்ராஜ் நடித்து வருகிறார். இப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்து வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார் சூர்யா. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள்... படங்கள் பிளாப் ஆனாலும் சம்பளத்தை சல்லி பைசா குறைக்காத சந்தானம்.. டிடி ரிட்டர்ன்ஸுக்கு இத்தனை கோடி வாங்கினாரா?

Tap to resize

அதேபோல் விக்ரம் நாயகனாக நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி உள்ளார். இப்படத்திற்காக 20 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார் விக்ரம். இப்படத்தில் விக்ரமுடன் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கே.ஜி.எப்-ஐ மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இப்படத்தை ஆஸ்கருக்கு கொண்டு செல்லும் ஐடியாவிலும் படக்குழு உள்ளது. 

இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் பட்ஜெட் விவரமும் வெளியாகி ரசிகர்களை வாயடைக்கச் செய்துள்ளது. அதன்படி விக்ரமின் தங்கலான் படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை தாண்டி சென்றுகொண்டிருக்கிறதாம். மறுபுறம் சூர்யாவின் கங்குவா படத்தின் பட்ஜெட் அதற்கு டபுள் மடங்கு இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது ரூ.250 கோடி இருக்குமாம். இதைப்பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் இருந்து அடுத்த கே.ஜி.எப்பும், அடுத்த பாகுபலியும் தயாராகி வருகிறது என மார்தட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... K.S Chitra : இந்தியாவின் மெலடி குயின்.. சின்னக்குயில் சித்ரா AsiaNet News நிறுவனத்திற்கு அளித்த பேட்டி!

Latest Videos

click me!