ET dubbing : வேற லெவல் ட்ரீட்...ரசிகர்ளுக்காக சொந்த குரலில் டப்பிங் பேசும் சூர்யா..எந்த மொழி தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Feb 12, 2022, 05:43 PM IST

ET dubbing : எதற்கும் துணிந்தவன் தெலுங்கு வர்சனுக்கு நடிகர் சூர்யா தனது சொந்த குரலில் டப்பிங் பேசும் போட்டோவை படக்குழு பகிர்ந்துள்ளது..

PREV
18
ET dubbing : வேற லெவல் ட்ரீட்...ரசிகர்ளுக்காக சொந்த குரலில் டப்பிங் பேசும் சூர்யா..எந்த மொழி தெரியுமா?
image from etharkum thuninthavan

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா (suriya) ஹீரோவாக நடித்துள்ளார். 

28
etharkum thuninthavan

ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

38
etharkum thuninthavan

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

48
etharkum thuninthavan

வினய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

58
etharkum thuninthavan

தமிழில் தயாராகி உள்ள இப்படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

68
etharkum thuninthavan

எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

78
Etharkkum Thunithavan

ஆனால் தற்போதைய சூழலில் இப்படம் திட்டமிட்டபடி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே எதற்கும் துணிந்தவன் வரும் மார்ச் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்படும் என  படக்குழு தெரிவித்துள்ளது..

88
Etharkkum Thunithavan

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் தெலுங்கு வர்சனுக்கு நடிகர் சூர்யா தனது சொந்த குரலில் டப்பிங் பேசும் போட்டோவை படக்குழு பகிர்ந்துள்ளது.. இந்த செய்தி ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது..

Read more Photos on
click me!

Recommended Stories