வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு நடிக்கும் புதிய படமான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா மேல எப்போதுமே ஒரு தனிப்பட்ட பிரியம் உண்டு. அவரை விட பெரிய ஸ்டார் வேல்யூ உள்ள நடிகர்கள் நிறைய பேர் இருந்தாலும், தங்களுக்கு நெருக்கமான ஒரு ஹீரோன்னா அது சூர்யாதான். அவருடைய ஆஃப்-ஸ்கிரீன் இமேஜும் இந்த மக்கள் ஆதரவுக்கு ஒரு முக்கிய காரணம். ஆனா, சமீபகாலமா அவருடைய ஸ்டார் வேல்யூக்கு ஏத்த ஒரு பெரிய ஹிட் அவருக்கு அமையல. இந்தச் சூழல்ல, இனி வரப்போற படங்கள் எல்லாமே நல்ல கதையம்சம் கொண்ட, சிறந்த டெக்னீஷியன்கள் வேலை செய்யுற படங்களா இருக்கு.
24
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் கதைக்களம்
அதுல ஒண்ணுதான் தமிழ், தெலுங்குல உருவாகுற 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. தெலுங்குல 'லக்கி பாஸ்கர்' என்ற மாஸ் ஹிட் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி தான் இந்த படத்தை இயக்குகிறார். இப்போ ரிலீஸ் ஆகியிருக்குற இந்த படத்தோட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் பயங்கரமான ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. இது ஒரு ஃபபேமிலி டிராமா ஜானர் படம்னு ஏற்கனவே வெளியான போஸ்டர்கள் மூலமா தெரிஞ்சது. ஒரு ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெயினரா இருக்கும்னு எல்லோரும் எதிர்பார்த்தாங்க. இப்போ டீசர் வந்த பிறகு, படத்தோட கதைக்களம் இதுதான்னு ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்காங்க.
34
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர் விமர்சனம்
இந்த படத்துல சூர்யாவுக்கு ஜோடியா மமிதா பைஜு நடிக்குறாங்க. சூர்யாவோட கேரக்டர் 40 வயசுக்காரராகவும், மமிதா கேரக்டர் 20 வயசு பெண்ணாகவும் காட்டப்படுது. 20 வயசு பெண்ணுக்கு 40 வயசுக்காரர் மேல வர்ற காதல்தான் படத்தோட கதையா இருக்கும்னு டீசர் உணர்த்துது. சூர்யா - மமிதா காம்போவோட கெமிஸ்ட்ரி சூப்பரா வொர்க் அவுட் ஆகியிருக்குனு ரசிகர்கள் கொண்டாடுறாங்க. அதுமட்டுமில்லாம, சூர்யாவோட ஹிட் படமான 'கஜினி'யில வர்ற சஞ்சய் ராமசாமி கேரக்டரை இந்த டீசர்ல சில இடங்கள்ல பார்க்க முடியுதுனும் நிறைய பேர் கமெண்ட் பண்றாங்க. சுவாரஸ்யமா, இந்த படத்துல சூர்யா கேரக்டர் பேரும் சஞ்சய் விஸ்வநாத் தான்.
'லக்கி பாஸ்கர்', 'வாத்தி' போன்ற படங்கள் மூலம் தன்னை நிரூபித்த வெங்கி அட்லூரி இயக்குறதுனால சூர்யா ரசிகர்கள் ரொம்ப நம்பிக்கையோட இருக்காங்க. டீசரோட டெக்னிக்கல் குவாலிட்டியும் பாராட்டுக்களை குவிக்குது. தமிழ், தெலுங்கு ரெண்டு மொழிலயுமே டீசருக்கு நல்ல வரவேற்பு. தமிழ் டீசருக்கு இதுவரைக்கும் 36 லட்சம் பார்வைகளும், தெலுங்கு டீசருக்கு 19 லட்சம் பார்வைகளும் கிடைச்சிருக்கு. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ், மற்றும் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் பேனர்கள்ல சூர்யதேவரா நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா இந்த படத்தை தயாரிக்கிறாங்க.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.