Suriya Jyothika : ரொமாண்டிக் விடுமுறையில் இருக்கும் சூர்யா-ஜோதிகா - எங்க தெரியுமா?

Published : Jun 29, 2025, 01:51 PM IST

சூர்யாவும் ஜோதிகாவும் சீஷெல்ஸில் ரொமாண்டிக் விடுமுறையை அனுபவித்து வருகின்றனர். ஹெலிகாப்டர் சவாரி உட்பட பல அனுபவங்களை அவர்கள் அனுபவித்தனர். ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பயணத்தின் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்.

PREV
14
நடிகை ஜோதிகா வெளியிட்ட வீடியோ

கோலிவுட்டின் அன்பான ஜோடிகளில் முக்கியமானவர்கள் சூர்யாவும், ஜோதிகாவும் என்றே கூறலாம். நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் ஆன சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளார்கள். தற்போது இந்த நட்சத்திர ஜோடி தங்கள் பரபரப்பான பிசி வாழ்க்கையில் இருந்து விலகி அமைதியான விடுமுறையை அனுபவித்து வருகின்றனர்.

24
சூர்யா - ஜோதிகா செஷல்ஸ் பயணம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள அழகிய தீவு நாடான சீஷெல்ஸில் ஓய்வெடுக்க சூர்யாவும், ஜோதிகாவும் சென்றுள்ளனர். அவர்களின் பயணத்தின் ஒரு அழகான வீடியோ ஆன்லைனில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த விடுமுறை அவர்களுக்கு ஓய்வெடுக்கவும், பரபரப்பான பிசி வேலையில் இருந்து விடுபட சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களின் பயணத்தின் போது, ​​ சீஷெல்ஸின் கடற்கரைகள் மற்றும் அழகிய நிலப்பரப்புகளை சுற்றி பார்த்தனர்.

34
சூர்யா - ஜோதிகா ஜோடி

அவர்கள் அங்கு உள்ளூர் உணவு வகைகளை ருசித்து, இயற்கையின் அழகில் திளைத்து, தீவின் அமைதியான சூழ்நிலையை உண்மையிலேயே அனுபவித்தனர் என்றே கூறலாம். நடிகை ஜோதிகா அவர்களின் மகிழ்ச்சியான அனுபவங்களின் காட்சிகளை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இது உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அவர்களின் விடுமுறையின் சிறப்பம்சங்களில் ஒன்று, ஹெலிகாப்டர் சவாரி செய்தது ஆகும்.

44
சூர்யா - ஜோதிகா வைரல் வீடியோ

ஜோதிகா தனது வீடியோவை "சொர்க்கத்தில் இன்னொரு நாள், நாம் இருவரும்" என்ற கேப்ஷனை பதிவிட்டார். சூர்யா தற்போது தனது வரவிருக்கும் படத்தில் பிஸியாக இருக்கிறார். டோலிவுட் இயக்குனர் வெங்கி அட்லூரி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் சூர்யதேவர நாக வம்சி தயாரிக்கிறார். சூர்யாவைப் போலவே ஜோதிகாவும் விரைவில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories