சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வந்தது. சிறுத்தை சிவா இயக்கிய இப்படம் ரிலீசுக்கு முன் பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் விடப்பட்டதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் விண்ணைமுட்டும் அளவுக்கு இருந்தது. படத்துக்கு அவர் கொடுத்த பில்டப்பே அப்படத்தின் படுதோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. படம் எதிர்பார்த்த அளவு இல்லாததால் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே ட்ரோல் மெட்டீரியலாக மாறியது கங்குவா.
24
கங்குவா படத்தால் கடும் நஷ்டம்
சுமார் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடியை கூட எட்டவில்லை. சூர்யா கெரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக கங்குவா மாறிவிட்டது. அப்படத்தின் தோல்விக்கு பின்னர் சூர்யா நடிப்பில் தற்போது ரெட்ரோ படம் தயாராகி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் வருகிற மே 1ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் சூர்யா கம்பேக் கொடுப்பார் என ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மறுபுறம் கங்குவா படத்தின் தோல்வியால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அப்படத்திற்கு பின் தன் அடுத்த படங்களை வெளியிட முடியாமல் திண்டாடி வருகிறார். அவர் தயாரிப்பில் அடுத்ததாக வா வாத்தியாரே திரைப்படம் தயாராகி இருக்கிறது. கார்த்திக் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படம் பல மாதங்களுக்கு முன்பே எடுத்துமுடிக்கப்பட்டாலும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
44
மீண்டும் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா
இப்படி கங்குவா திரைப்படத்தால் கடும் நஷ்டத்தில் சிக்கி இருக்கும் ஞானவேல் ராஜாவுக்கு உதவிக்கரம் நீட்ட முன் வந்துள்ளாராம் சூர்யா. அதன்படி ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் மேலும் 2 படங்களை நடித்துக் கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக தெலுங்கு மற்றும் மலையாள இயக்குனர்களிடம் கதைகேட்டிருக்கிறாராம் சூர்யா. அந்த இரண்டு படங்களை இயக்கபோவது யார் என்கிற அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.