Published : Feb 19, 2025, 10:48 AM ISTUpdated : Feb 19, 2025, 10:56 AM IST
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்துடன் 25 ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகை நடித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
விடாமுயற்சி படத்திற்கு பின்னர் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான இவர் முதன்முறையாக அஜித்துடன் கூட்டணி அமைத்துள்ளதால், இப்படம் நிச்சயம் ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குட் பேட் அக்லி திரைப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் இது இப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளது.
24
50 நாளில் குட் பேட் அக்லி ரிலீஸ்
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரம் மாதம் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது. குட் பேட் அக்லி திரைப்படம் முழுக்க முழுக்க அஜித்தின் மாஸ் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தரே கூறி இருந்தார்.
குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆக இன்னும் 50 நாட்களே எஞ்சி உள்ளதால் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இம்மாத இறுதியில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளதாம். இந்நிலையில், இப்படத்தில் திரிஷா மட்டுமின்றி மற்றொரு ஹீரோயினும் நடித்துள்ள தகவல் கசிந்துள்ளது. அவர் 25 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கிறாராம்.
44
குட் பேட் அக்லியில் சிம்ரன்
அந்த நடிகை வேறுயாருமில்லை.. சிம்ரன் தான். அவர் தமிழில் டாப் ஹீரோயினாக வலம் வந்தபோது அஜித்துக்கு ஜோடியாக அவள் வருவாளா, வாலி மற்றும் உன்னைக் கொடு என்னை தருவேன் ஆகிய மூன்று படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இணைந்து நடிக்காமல் இருந்த இந்த ஜோடி தற்போது 25 ஆண்டுகளுக்கு பின்னர் குட் பேட் அக்லி படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆதிக் இயக்கத்தில் ஏற்கனவே த்ரிஷா இல்லேனா நயன்தாரா படத்தில் நடித்த சிம்ரன், தற்போது 2வது முறையாக அவர் இயக்கத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.