
கர்நாடக தலைநகரான பெங்களுரில் கடந்த 1950 -ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி மராத்திய குடும்பத்தில் பிறந்தவர் சிவாஜி ராவ் கெய்க்வாட்.....
9 வயதில் தாயை இழந்த சிவாஜி ராமகிருஷ்ணா மிஷன், ஆச்சார்யா பாடசாலா உள்ளிட்ட மடப்பள்ளிகளில் தனது பள்ளிக்கல்வியை முடித்த்தார். பள்ளிப்படிப்பில் போது சிறு சிறு நாடகங்களில் நடித்துவந்தார் சிவாஜி....
தந்தையின் ஓய்வுக்கு பிறகு குடும்ப சூழலால் பணிக்கு சென்ற சிவாஜி முதலில் கிடைத்த கூலி வேலைகளை செய்து வந்தார். பின்னர் , பெங்களூரு போக்குவரத்துச் சேவையில் (BTS) பேருந்து நடத்துனராகப் பணி அமர்த்தப்பட்டார் சிவாஜி.
சிவாஜி மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் தங்கியிருந்த காலத்தில், தமிழ் திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தர் அவர்களால் கவனிக்கப்பட்டார் .
தமிழ் பேசக் கற்றுக் கொள்ளுமாறு இயக்குனர் கே. பாலச்சந்தர் அவருக்கு அறிவுறுத்த அந்த பரிந்துரையை ரஜினிகாந்த் விரைவாக பின்பற்றி தமிழ் மொழியில் படிக்க கற்றுக்கொண்டார்.
1975 ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் சிவாஜி. ....
ரஜினி முதல் முதலில் கன்னட படத்தில் தான் ஹீரோவாக நடித்தார். மூன்று சிறுகதைகள் அடிப்படையாகக் கொண்ட கதா சங்கமம் என்னும் படத்தில் "Puttanna Kanagal" என்பவர் இயக்கி இருந்தார்....
இதன்பிறகு 1976-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய "அந்துலேனி கதா" என்னும் தெலுங்கு மொழித் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
80 களில் நடிகர்களில் ஒருவராக இருந்த ரஜினி 90களின் முற்பகுதியில் முன்னனி நடிகராக மிளிர துவங்கினார்...அப்போது வெளியான பணக்காரன், அதிசயபிறவி, தர்மதுரை, தளபதி, மன்னன், அண்ணாமலை, பாண்டியன் எஜமான், உழைப்பாளி, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா என அடுத்தடுத்து வெளியான ரஜினி படங்கள் 100நாட்களை கடந்து வெற்றி சிகரத்தை தொட்டது.
ரஜிக்கென அமைக்கப்படும் நாயகன் அறிமுக பாடல் தத்துவப்பாடல், ஒரு சோகப்பாடல் என கட்டயாம் அனைத்து படங்களிலும் வைக்கப்படும் பாடல்கள் இன்றளவும் பிரபலம். மோட்டிவேஷன் என்றாலே ரஜினி சாங்ஸ் தான் என்னும் அளவிற்கு மனதை வருடும் பாடல்களை அவை.
90 களில் கொடி கட்டி பரந்த ரஜினியின் படங்கள் 2000த்தில் போதுமான வரவேற்பை பெறவில்லை அப்போது வெளியான பாபா, சந்திரமுகி, சிவாஜி, குசேலன் உள்ளிட்டவை போதுமான வெற்றியை பெறவில்லை.
சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் ஓரளவு வரவேற்பை பெற்றது. ரஜினியை புதிய கோணத்தில் இயக்குனர் ஷங்கர் காட்டியிருப்பார். பின்னர் வெளியான கபாலி, காலா, 2.0, அண்ணாத்தா உள்ளிட்ட படங்களும் 90 களின் வெற்றியை பெற்றுக்கொடுக்கவில்லை.
80 களின் இறுதியில் இருந்து எழுந்து வந்த அரசியல் நுழைவுக்கான குழப்பத்திற்கும் இந்த வருடத்தில் ஒரு முடிவு கட்டிய ரஜினி, தான் நடிகனாக இருக்கவே விரும்புவதாக அறிவித்துவிட்டார்.
இன்று தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர்ஸ்டார் அவர்களின் இனி வரும் படங்கள் பழைய வெற்றியை ஈட்டி தர வேண்டும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
செவாலியே சிவாஜி கணேசன், பத்மபூஷன்,பத்ம விபூஷண், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகளை தாமதாக்கியுள்ளார் சூப்பர்ஸ்டார்.