விஜய்யின் ‘பகவதி’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜெய். இதைத்தொடர்ந்து இவர் நடித்த ‘சென்னை 600028’, 'சுப்ரமணியபுரம்', ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’ போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி ஜெய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.
26
தற்போது இவரின் கைவசம், 'பிரேக்கிங் நியூஸ்', 'பார்ட்டி', 'குற்றமே குற்றம்', ‘சிவ சிவா’, கோபி நைனார் இயக்கத்தில் ஒரு படம், இயக்குனர் பத்ரி இயக்கத்தில், சுந்தர் சி தயாரிப்பில் ஒரு படம் என சுமார் 7 படங்கள் உள்ளது.
36
இதில் சில படங்களின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இவ்வாறு பிசியான நடிகராக வலம்வரும் ஜெய், தற்போது கார் ரேஸில் கலந்து கொள்ள தயாராகி உள்ளார். 3 ஆண்டுகளுக்கு பின் அவர் கார் ரேஸில் கலந்துகொள்ள உள்ளார்.
46
எம்.ஆர்.எஃப் மற்றும் ஜே.ஏ மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் பார்முலா 4 கார் பந்தயத்தில் ஜெய் களமிறங்க உள்ளார். இந்த கார் பந்தயம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது.
56
இந்த பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ள நடிகர் ஜெய்க்கு தொழிலதிபர் வருண் மணியனும், எண்ணித்துணிக படக்குழுவும் ஸ்பான்சர் செய்துள்ளனர்.
66
இந்த பந்தயத்திற்காக நடிகர் ஜெய் 14 கிலோ உடல் எடையை குறைத்து இருக்கிறாராம். இதை அறிந்த ரசிகர்கள் அஜித்தைப் போல் கார் ரேஸில் பல வெற்றிகளைப் பெறுமாரு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.