இ-பாஸ் வாங்கி பண்ணை வீட்டிற்கு சென்ற ரஜினிகாந்த்... ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்த மாநகராட்சி...!

First Published Jul 23, 2020, 6:43 PM IST

ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ரஜினி வீட்டிலேயே முடங்கி இருந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்று வந்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு சூப்பர் ஸ்டார் முறையாக இ-பாஸ் பெற்று தான் சென்றாரா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு விலை உயர்ந்த லம்போர்கினி காரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே ஓட்டிச்செல்வது போன்ற புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. மாஸ்க் அணிந்த படி மாஸாக இருக்கும் தலைவரின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் திக்குமுக்காடினர்.
undefined
கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன் மற்றும் பேரன் ஆகியோர் உள்ளனர். எனவே அங்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் பொழுதை கழிப்பதோடு, வாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
undefined
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கி கேளம்பாக்கம் சென்றாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது: மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு E – Pass தேவை என்பது கட்டாயம். ஆனால் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டத்தில் இ பாஸ் வாங்கினாரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
undefined
தற்போது ரஜினிகாந்த் முறையாக இ-பாஸ் பெற்றே செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அந்த இ-பாஸில் மருத்துவ காரணங்களுக்காக செல்வதாகவும், தன்னுடன் சேர்த்து ஓட்டுநரும் இன்னோவா காரில் பயணிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
undefined
அவருக்கு இ-பாஸ் வழங்கப்பட்ட தேதியாக ஜூலை 22-ம் தேதியும், பயண தேதியாக ஜூலை 23-ம் தேதியும் (இன்று) குறிப்பிடப்பட்டுள்ளது.
undefined
click me!