முதல் முறையாக வளைய காப்பு புகைப்படத்தை வெளியிட்டு... சோகத்தை பகிர்ந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

முதல் முறையாக வளைய காப்பு புகைப்படத்தை வெளியிட்டு... சோகத்தை பகிர்ந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!
 

1983 ம் ஆண்டு, தன்னுடைய 13 வது வயதில் 'வெள்ளை மனசு' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரம்யாகிருஷ்ணன். இந்த படத்தில் ஒய. ஜி.மகேந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து தமிழ் மொழி மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன்.

30 ஆண்டுகளாக திரைத்துறையில் நிலையான இடத்தைப் பிடித்துள்ள இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'படையப்பா' படத்தில் நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாத ஒன்று.
அதே போல் கமலஹாசனுடன் பஞ்சதந்திரம், மற்றும் சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான 'தங்கம்', 'வம்சம்' ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படையப்பா படத்திற்கு பின், இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது, இவர் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராஜமாதா 'சிவகாமி தேவி' கதாப்பாத்திரத்தில் நடித்த பாகுபலி திரைப்படம்.
பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் பேசப்படும் நடிகையாக மாறினார் ரம்யா கிருஷ்ணன்.
சமீபத்தில் கூட சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், தேவ், வந்த ராஜாவா தான் வருவேன், மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்து அசத்தியிருந்தார்.
ஐம்பது வயதை கடந்து விட்ட ரம்யா கிருஷ்ணன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் மிகவும் துணிச்சலான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள, பார்ட்டி படத்திலும் கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பு மூட்டும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் முதல் முறையாக, தன்னுடைய வளையக்காப்பு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் இவருக்கு வளையல் போட்டு விடும், தன்னுடைய பெரியம்மா இருவருமே இப்போது உயிருடன் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!