‘சூப்பர் சிங்கர் 8’ஆதித்யா கிருஷ்ணன் இந்த பிரபல நடிகையின் மகனா?... வைரலாகும் அம்மாவுடனான போட்டோ...!

First Published | Feb 5, 2021, 5:56 PM IST

கடல் கடந்து வரும் திறமைசாலிகளையும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரத்தின கம்பளம் விரித்து வரவேற்று வருகிறது.

விஜய் டிவியில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகின.
கடந்த ஜனவரி மாதம் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட தொடங்க விழா 9 மணி நேரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 10க்கும் மேற்பட்ட டாப் சிங்கர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் மட்டுமல்லாது பிறநாடுகளைச் சேர்ந்த திறமைசாலிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். கடல் கடந்து வரும் திறமைசாலிகளையும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரத்தின கம்பளம் விரித்து வரவேற்று வருகிறது.
Tap to resize

ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்த எட்டாவது சீசனில் முதல் எபிசோடிலேயே சிறப்பாக பாடி அனைவர் கவனத்தையும் பெற்றவர் ஆதித்யா கிருஷ்ணன். இவர் ஒரு பாடகர், சாங் ரைட்டர் மற்றும் மியூசிக் கம்போசர், கிட்டர் கலைஞர் என பன்முக திறமைகளின் கலவையாக பங்கேற்றிருக்கிறார்.
சின்னத்திரையில் அறிமுகமாகி பின்பு வெள்ளித்திரையில் டாப் ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மா கேரக்டரிலும், பல குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் மனதை கவர்ந்த முன்னணி நடிகை மீரா கிருஷ்ணனின் மகன் தான் இந்த ஆதித்யா கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது.
இந்த செய்தியைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் அம்மா, மகன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வாழ்த்து கூறி வருகின்றனர்.
கமலின் சூப்பர் ஹிட் பாடலான "உனக்கென்ன மேலே நின்றாய்" பாடலை பாடி இவர் கடந்த வாரம் வெளியிட்ட ஆல்பம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆதித்யா கிருஷ்ணனின் குரலை பாராட்டி தனது டிவிட்டர் தளத்தில் இந்த ஆல்பத்தை வெளியிட்டார். கமலின் அடுத்த படமான "விக்ரம்" படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!