கொலை மிரட்டல் விடுக்கும் இரண்டாவது கணவர்... நடிகை ராதா மீண்டும் போலீசில் பரபரப்பு புகார்!

First Published Jul 3, 2021, 11:10 AM IST

நடிகை ராதா தன்னுடைய இரண்டாவது கணவர், தன்னை சந்தேகப்பட்டு அடித்து கொடுமைப்படுத்துவதாக கடந்த ஏப்ரல் மாதம் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுத்த நிலையில், அதை தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக புகார் அளித்துள்ளார்.
 

கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் அசோகன் இயக்கத்தில், முரளி, வடிவேலு, நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காமெடி திரைப்படம் 'சுந்தரா டிராவல்ஸ்'. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராதா. இந்த படம் இவருக்கு சிறந்த அறிமுக படமாக அமைந்தாலும், இதை தொடர்ந்து, தமிழில் இவர் நடித்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.
undefined
பின்னர் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ராதா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். பின்னர் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன் இவருக்கும் சப் -இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு கடந்த ஓராண்டுக்கு மேல் சாலிகிராமத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
undefined
வசந்த ராஜாவுக்கும், ராதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஏற்கனவே காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்திருந்தார். ராதா நடிகை என்பதால் அவர் தனக்கு தெரிந்த திரையுலக நண்பர்கள் உடன், அடிக்கடி போன் மூலம் பேசி வந்துள்ளார். இதனால் ராதா மீது சந்தேகப்பட்ட வசந்தராஜா, அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறி, ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தன்னை தன்னுடைய இரண்டாவது கணவர் வசந்தராஜா அடித்து கொடுமை செய்வதாக பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
undefined
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்த போது, தன்னுடைய கணவருடன் சமாதானம் ஆகிவிட்டதாக கூறி, இருவரும் காவல் நிலையத்தில் கடிதம் எழுதி கொடுத்துவிட்டு மீண்டும் சேர்த்து வாழ துவங்கினர். இந்நிலையில் இந்த பிரச்சனை நடந்து 3 மாதங்களே ஆகும் நிலையில் மீண்டும் கணவர் வசந்த ராஜா மீது நடிகை புகார் கொடுத்துள்ளார்.
undefined
அதில்... தொடர்ந்து வசந்தராஜா எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் பாரதி, இளம்பருதி ஆகியோர் எனது ஆட்கள்தான். நீ என்ன புகார் கொடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. போலீசில் எழுதி தந்ததை எல்லாம் அழித்துவிட்டேன் என வசந்தராஜா கூறினார்.
undefined
இது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக கேட்ட போது வசந்தராஜா எழுதி கொடுத்த மன்னிப்பு கடிதம் அதில் இல்லை என்பது தெரியவந்தது. எனவே வசந்தராஜாவுக்கு ஆதரவாகவும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் இளம்பருதி, பாரதி ஆகியோர் மீதும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த வசந்தராஜா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று நடிகை ராதா தன்னுடைய புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
undefined
click me!