மணப்பெண் கெட்டப்பில் மனதை அள்ளும் நயன்தாரா... கழுத்து நிறைய நகைகளுடன் சும்மா தகதகன்னு மின்னும் போட்டோஸ்...!

First Published | Jul 3, 2021, 10:43 AM IST

புதிய விளம்பரத்திற்காக கழுத்து நிறைய தங்க நகைகளுடன் சும்மா தகதகவென மின்னும் நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, ரசிகர்களின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. சூப்பர் ஸ்டார், தளபதி படங்களில் ஜோடியாக நடித்தாலும் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளிலும் நடிக்க தயங்குவதில்லை.
மாயா, டோரா, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் பட வரிசையில் தற்போது நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்.
Tap to resize

என்ன தான் சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் விளம்பர படங்களில் நடிப்பதிலும் நயன்தாரா அதே அளவிற்கு கவனம் செலுத்தி வருகிறார். அப்படி நயன் பிரபல நகைக்கடை விளம்பரத்தில் நடித்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
தற்போது அந்த நிறுவனத்தில் புதிய விளம்பரத்திற்காக கழுத்து நிறைய தங்க நகைகளுடன் சும்மா தகதகவென மின்னும் நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சிம்பிளான சிவப்பு நிற பட்டுப்புடவையில், தலை நிறைய மல்லிகைப்பூ, உச்சி முதல் பாதம் வரை ஜொலி ஜொலிக்கும் நகைகள் அணிந்து, தலை குனிந்த படி அமர்ந்திருக்கும் நயனின் இந்த க்யூட் போட்டோஸ் லைக்குகளை அள்ளி வருகிறது.
அதேபோல் கேரள மணப்பெண் கெட்டப்பில் பச்சை வண்ண கற்கள் பதித்த நகைகள் அணிந்து அழகு தேவையாய் மிளிரும் நயன்தாராவின் புகைப்படமும் வைரலாகி வருகிறது.
ஜொலி ஜொலிக்கும் வைர நகைகளுடன் தேவதையாய் மின்னும் நயன்தாராவின் லேட்டஸ்ட் கிளிக்

Latest Videos

click me!