சன் டிவியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இரண்டு புத்தம் புது சீரியல்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வர உள்ளார்களாம். அது என்னென்ன சீரியல்கள் என்பதை பார்க்கலாம்.
சின்னத்திரை சீரியல்கள் என்றாலே சன் டிவி தான் என சொல்லும் அளவுக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக பல்வேறு சூப்பர் ஹிட் சீரியல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது சன் டிவி. இதன் காரணமாக தான் டிஆர்பி-யில் யாரும் அசைக்க முடியாத உயரத்தில் இருக்கிறது சன் டிவி. அதில் ஒளிபரப்பாகி வரும் கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள் ஆகிய சீரியல்கள் தான் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்று டாப் 10 பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
24
Sun TV புன்னகை பூவே சீரியல்
இந்நிலையில் சன் டிவியில் இரண்டு முக்கிய சீரியல்கள் விரைவில் முடிவுக்கு வர உள்ளன. அதில் புன்னகை பூவே சீரியலும் ஒன்று. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் சைத்ரா சக்காரி என்பவர் தான் ஹீரோயினாக நடித்து வந்தார். அவருக்கு கன்னட சீரியல் வாய்ப்பு ஒன்று வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் புன்னகை பூவே சீரியலை விட்டு திடீரென விலகினார் சைத்ரா சக்காரி. இதையடுத்து புது ஹீரோயின் உடன் ஒளிபரப்பாகி வந்தது புன்னகை பூவே சீரியல்.
34
Punnagai Poove சீரியல் கிளைமாக்ஸ்
சைத்ரா சக்காரி ரோலுக்கு புது ஹீரோயின் செட் ஆகாததால், அந்த சீரியலுக்கான டிஆர்பி-யும் படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் வேறு வழியின்றி புன்னகை பூவே சீரியலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். இதன் கிளைமாக்ஸ் ஷூட்டிங்கும் அண்மையில் முடிவடைந்து உள்ளது. தொடங்கிய 9 மாதங்களில் புன்னகை பூவே சீரியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் இதற்கு பதிலாக புது சீரியலும் வர உள்ளதாக கூறப்படுகிறது.
புன்னகை பூவே சீரியலை தொடர்ந்து சன் டிவியில் மற்றுமொரு சீரியலும் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது வேறெதுவுமில்லை, கடந்த ஆண்டு சஞ்சீவ், ஸ்ருதி ராஜ் நடிப்பில் தொடங்கப்பட்ட லட்சுமி சீரியல் தான். இந்த சீரியல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இந்த தொடரில் இருந்து சஞ்சீவ் விலகியதை அடுத்து அதன் ரேட்டிங் குறைய ஆரம்பித்தது. இதனால் விரைவில் லட்சுமி சீரியலும் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இதுபற்றி அறிவிப்பு வெளியாகவில்லை.