“சந்திரமுகி” டைட்டிலுக்காக சன் பிக்சர்ஸ் கொடுத்த தொகை இவ்வளவா?... டோட்டல் பட்ஜெட்டை கேட்டா தலையே சுத்துதே!

First Published Dec 5, 2020, 4:54 PM IST

சந்திரமுகி 2 படத்தை தயாரிக்க உள்ள சன்பிக்சர்ஸ் நிறுவனம் அந்த டைட்டிலை பெறுவதற்காக கொட்டிக் கொடுத்த தொகையைக் கேட்டால் நிச்சயம் தலை சுற்றும். 

மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் மணிசித்ரத்தாலு. மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான ஃபாசில் இயக்கத்தில் மோகன் லால், ஷோபானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
undefined
இந்த படத்தை இயக்குநர் பி.வாசு “ஆப்தமித்ரா” என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்தார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் சக்கப்போடு போட்ட அந்த படம் தான் சந்திரமுகி என்ற படத்தில் தமிழில் உருவானது.
undefined
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியானது. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர் உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
undefined
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அனுமதியுடன் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 உருவாக உள்ளது. பி.வாசு இயக்க உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
undefined
இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்றால் அது சந்திரமுகி தான், அதனால் தான் படத்திற்கு தலைப்பாக கூட அதே பெயரை வைத்தனர்.
undefined
தற்போது சிவாஜி புரோடக்‌ஷன் கைவசம் உள்ள சந்திரமுகி டைட்டிலை ஒரு கோடி ரூபாய் கொடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் டைட்டிலை வாங்கவே இவ்வளவு கோடியா? என ரசிகர்கள் வாய்பிளக்கும் அதே சமயத்தில் மற்றொரு தகவலும் பரவி வருகிறது.
undefined
அதாவது சந்திரமுகி 2 படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம். அந்த படத்திற்காக ரூ.100 கோடியை பட்ஜெட் தொகையாக ஒதுக்கியுள்ளதாம்.
undefined
click me!