பாத்திமா பாபுவுக்கு திடீர் ஆபரேஷன்... ஏன்? அவரே கூறிய ஷாக்கிங் தகவல்..!

Published : Jun 30, 2021, 12:39 PM IST

பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான பாத்திமா பாபு... திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.  

PREV
16
பாத்திமா பாபுவுக்கு திடீர் ஆபரேஷன்... ஏன்? அவரே கூறிய ஷாக்கிங் தகவல்..!

இப்போது எத்தனையோ பல திறமையான செய்தி வாசிப்பாளர்கள் இருந்தாலும், என்றென்றும் மக்கள் மனதை விட்டு நீங்காத இடம்பிடித்த செய்தியாளராக, நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு போன்ற சிலர் உள்ளனர். இவர்களில் செய்தி வாசிப்பை தாண்டி, நடிப்பிலும் கலக்கியுள்ளவர் பாத்திமா பாபு. 

26

மேலும் பல சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டார்.

36

தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 
 
46

இந்நிலையில் இவர் திடீர் என உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியாகி இவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

56

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பாத்திமா பாபு, சிறுநீரகத்தில் 7.8 மில்லி மீட்டர் அளவில் கல் இருந்ததாகவும், அது சிறுநீர் குழாய்க்கு சென்றதால் தாங்க முடியாத வலி ஏற்படவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்து முடிக்கப்பட்டு, தற்போது நலமுடன் இருப்பதாகவும் தனது யூ-ட்யூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார். 

66

அதோடு மருத்துவர்கள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 3 . 5 லிட்டர் தண்ணீர் பருக கூறியுள்ளதாகவும், நீங்களும் தண்ணீர் அதிகம் குடியுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். இதை தொடர்ந்து அவர் உடல்நிலை முழுமையாக நலம் பெற  ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

click me!

Recommended Stories