படம் எடுக்க 30 லட்சம் கொடுத்தேன்! ஏமாத்திட்டாரு! விசிக மாவட்ட செயலாளர் கோபி நயினார் மீது பெண் புகார்.!

First Published Jun 7, 2023, 1:01 PM IST

தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் மற்றும் அறம் பட இயக்குநரும், விசிக பிரமுகருமான கோபி நயினார் மீது பிரான்ஸ் நாட்டு பெண் 30 லட்சம் ரூபாய் மோசடி புகார் அளித்துள்ளார். 

இலங்கை தமிழரான சியாமளா. கடந்த 35 வருடங்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டிற்கு அங்கேயே வசித்து வருகிறார். தொழிலதிபரான இவர் அறம் பட இயக்குநரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருமான கோபி நயினார் மற்றும் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். 

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சியாமளா;- கடந்த 2018-ம் ஆண்டு சினிமா நட்பு வட்டாரங்கள் மூலமாக ஆக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் அறம்பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகர் ஜெய்யை வைத்து `கருப்பர் நகரம்' என்ற திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும், அந்த படத்திற்கு இணைந்து தயாரிப்பாளராக செயல்படுமாறும் தன்னிடம் கூறினார்.

அதன்பேரில் பல்வேறு தவணையாக 30 லட்சம் ரூபாயில் கொடுத்தேன். அதில், 5 லட்சம் ரூபாயை கையில் பணமாக கொடுத்தேன். பின்னர் இத்திரைப்படத்தின் பூஜை முடிந்து மூன்று நாட்கள் ஜெய்யை வைத்து கோபி நாயினார் படப்படிப்பு நடத்தினார். தானும் 3 நாட்கள் அந்த சூட்டிங்கில் கலந்து கொண்டேன். பின்னர் 6 மாதத்தில் படத்தை முடித்துவிடலாம். படத்தின் லாபத்தில் 25 சதவீதம் தருவதாகவும் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பிறகு பிரான்ஸ் சென்றுவிட்டேன். விஜய் அமிர்தராஜ் மற்றும் இயக்குநர் கோபி நாயினார் ஆகியோர் தனது தொடர்பை அறவே துண்டித்தனர். 

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். இயக்குநர் கோபி நயினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளராக உள்ளதால் தலைவர் தொல் திருமாவளவன் தலையிட்டு எனது பணத்தை பெற்று தரவேண்டும். முதல்வர் ஸ்டான்லி தனக்கு உதவி புரிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

click me!