விடிவி முதல் 96 வரை... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரிஷாவின் டாப் 10 படங்கள்

First Published | Aug 21, 2024, 1:54 PM IST

செளத் குயின் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை திரிஷா நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ

Trisha Top 10 Hiit Movies

மாடலிங் முடித்து மிஸ் சென்னை பட்டம் பெற்ற கையோடு சினிமாவுக்குள் நுழைந்தவர் திரிஷா. தமிழ் சினிமாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நாயகியாக வலம் வரும் திரிஷா, பெரும்பாலான டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். அவரின் கெரியரில் ஏராளமான ஹிட் படங்களை திரிஷா கொடுத்துள்ள நிலையில், அவரின் டாப் 10 ஹிட் படங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

VTV and 96

96 மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா

திரிஷாவின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டு படங்கள் என்றால் அது 96 மற்றும் விடிவி தான். இதில் 96 படத்தை பிரேம் குமார் இயக்கி இருந்தார். இதில் விஜய் சேதுபதி ஜோடியாக ஜானு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திரிஷா. அதேபோல் கெளதம் மேனன் இயக்கிய விடிவி படத்தில் ஜெஸ்ஸியாக நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டார் திரிஷா. 

Tap to resize

Saamy and Ghilli

கில்லி மற்றும் சாமி

திரிஷாவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படங்கள் என்றால் அது கில்லியும் சாமியும் தான். இதில் சாமி படத்தை ஹரி இயக்கி இருந்தார். அப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பிராமின் வீட்டு பெண்ணாக நடித்திருந்தார் திரிஷா. அதேபோல் கில்லி படத்தில் முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் திரிஷா, தரணி இயக்கிய இப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி மாஸ் வெற்றி பெற்றது.

இதையும் படியுங்கள்... பாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி நெட்பிளிக்ஸில் மகாராஜா படைத்த மாஸ் சாதனை!

Mounam Pesiyadhe and Unakkum enakkum

மெளனம் பேசியதே மற்றும் உனக்கும் எனக்கும்

நடிகை திரிஷாவை ஹீரோவாக அறிமுகப்படுத்திய படம் மெளனம் பேசியதே. அமீர் இயக்கிய இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் திரிஷா. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தான் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதேபோல் ஜெயம் ரவி ஜோடியாக திரிஷா முதன்முதலில் நடித்த படம் உனக்கும் எனக்கும். இப்படத்தை மோகன் ராஜா இயக்கி இருந்தார். இது ரீமேக் படமாக இருந்தாலும் சூப்பர்ஹிட் ஆனது.

Abhiyum Naanum and Ponniyin Selvan

அபியும் நானும் மற்றும் பொன்னியின் செல்வன்

கமர்ஷியல் படங்களை தாண்டி திரிஷா தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்தார். அப்படி அவர் நடித்து ஹிட்டானது தான் இந்த இரண்டு படங்களும். இதில் அபியும் நானும் படத்தை ராதா மோகனும், பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னமும் இயக்கி இருந்தனர். இந்த இரண்டு படங்களிலும் திரிஷாவுக்கு தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mankatha and Leo

லியோ மற்றும் மங்காத்தா

விஜய் மற்றும் அஜித்துடன் தொடர்ச்சியா ஹிட் படங்களில் நடித்தவர் திரிஷா. அந்த பட்டியலில் மங்காத்தா படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். வெங்கட் பிரபு அப்படத்தை இயக்கி இருந்தார். அதேபோல் லியோ படம் தான் திரிஷா நடித்ததிலேயே அதிக வசூல் செய்த படமாகும். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்யின் மனைவியாக நடித்திருந்தார் திரிஷா.

இதையும் படியுங்கள்... குட்டி தம்பியுடன் நிறைமாத நிலவாக ரித்திகா! வைரலாகும் வளைகாப்பு போட்டோஸ்!

Latest Videos

click me!