கடைசி தொழிலாளி சொந்த ஊருக்கு செல்லும்வரை என் பணி தொடரும்..! ரியல் ஹீரோ சோனு சூட் உருக்கம்!

First Published Jun 10, 2020, 7:31 PM IST

புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்களுடைய சொந்த ஊரை அடைய தொடர்ந்து தன்னுடைய சொந்த செலவில் அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்து கொண்டிருக்கும் நடிகர் சோனு சூட், கடைசி தொழிலாளி சொந்த ஊர் சென்று அடையும் வரை தன்னுடைய பணி தொடரும் என தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூலி தொழில் செய்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலர், திடீர் என போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றியும், தங்க இடம் இன்றியும் தவித்து வந்த நிலையில், பாதிக்கபப்ட்ட பலரை தன்னுடைய சொந்த செலவில் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார் பிரபல நடிகர் சோனு சூட்.
undefined
இவரின் இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், சிலர் இவருடைய பணிக்கு பின்னல் அரசியல் நோக்கம் இருப்பதாக விமர்சித்தும் வருகிறார்கள்.
undefined
இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சோனு சூட்... தனக்கு அரசியலில் துணி கூட ஆர்வம் இல்லை என தெரிவித்துள்ளார்.
undefined
தற்போது வளர்ந்த நடிகராக இருந்தாலும், மும்பைக்கு நானும் புலம் பெயர்ந்து வந்தவன் என்பதால், புலம்பெயர் தொழிலாளர்களின் வலி என்ன என்பது தனக்கு தெரியும் என மனதை உருக்கும் விதத்தில் பேசியுள்ளார்.
undefined
ஊர்விட்டு ஊர் வந்து பல்வேறு கஷ்டங்களுக்கு பிறகு தான் இந்த நிலையை அடைந்துள்ளதால், குடும்பத்தை பிரிந்து ஒவ்வொரு நாளும் வேதனையில் இருக்கும் தொழிலாளர்கள் வலி வேதனை அறிந்து இந்த பணியை செய்து வருவதாக கூறுகிறார்.
undefined
சொந்த ஊருக்கு செல்ல, பேருந்து வசதிகள் போன்றவை இல்லாமல் சிலர் நடந்து செல்வதை பார்க்கும் போது மனம் வழிப்பதாகவும் அதனால், கடைசி தொழிலாளி சொந்த ஊர் சென்றடையும் வரை தன்னுடைய பணி தொடரும் என தெரிவிக்கிறார் சோனு சூட்.
undefined
இதுவரை 20 ஆயிரம் தொழிலாளர்களை பேருந்து, ரயில், மற்றும் விமானம் மூலம் அனுப்பி மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக உயர்ந்துள்ளார் சோனு சூட்.
undefined
click me!