Sobhita Dhulipala Insta Story about Naga Chaitanya Playing DJ : தனது கணவர் நாக சைதன்யா டிஜே பிளே பண்ணும் புகைப்படத்தை சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.
நாக சைதன்யா பொத்தி பொத்தி வச்ச திறமையை வெளிக்காட்டிய சோபிதா!
Sobhita Dhulipala Insta Story about Naga Chaitanya Playing DJ : நாக சைதன்யா 2ஆவதாக நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். சோபிதா துலிபாலா உடனான திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா நடிப்பில் தண்டேல் படம் வெளியானது. சந்து மொண்டேடி இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் கடந்த 7ஆம் தேதி வெளியான படம் தான் தண்டேல். முழுக்க முழுக்க காதல் மற்றும் மீனவர்களைப் பற்றி எடுக்கப்பட்ட இந்தப் படம் நாக சைதன்யாவின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
23
நாக சைதன்யா பொத்தி பொத்தி வச்ச திறமையை வெளிக்காட்டிய சோபிதா!
இதுவரையில் தண்டேல் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து புதிய சாதனை படைத்திருக்கிறது. இந்தப் படத்தில் இடம் பெற்ற ஓம்நமசிவாய பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. நாக சைதன்யாவின் இந்த வெற்றிக்கு எல்லோருமே சோபிதா துலிபாலா வந்த நேரம் என்று கூறி வருகின்றனர். நாகர்ஜூனா கூட ஒரு மேடையில் தனது மருமகள் வந்த நேரம் தான் வெற்றிக்கு காரணம் என்று கூறியிருந்தார்.
33
நாக சைதன்யா பொத்தி பொத்தி வச்ச திறமையை வெளிக்காட்டிய சோபிதா!
இந்த நிலையில் தான் சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் நாக சைதன்யா டிஜே பிளே பண்ணுவது போன்ற ஒரு புகைப்படத்தை வைத்துள்ளார். சோபிதா துலிபாலா பகிர்ந்த அந்த புகைப்படத்தில் நாக சைதன்யா ஸ்வெட்டர் ஒன்று அணிந்து கொண்டு கழுத்தில் ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டும் டிஜேவாக மாறி சூழலுக்கு ஏற்ப பாடல் பிளே செய்கிறார். இந்த புகைப்படம் தான் இப்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.