
Snehan Posted Emotional Video About his Wife Kannika and his twins Girl baby :கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு கசப்பான சம்பவங்கள் நடைபெற்றதோ அந்தளவிற்கு இனிப்பான சம்பவங்களும் நடைபெற்றது. கசப்பான சம்பவங்கள் என்றால் சினிமா பிரபலங்களின் விவாகரத்து. இனிப்பான சம்பவங்கள் என்றால் கார் வாங்குவது, வீடு வாங்குவது, குழந்தை பிறப்பது என்று மகிழ்ச்சியான தருணங்களை பிரபலங்கள் அனுபவித்து வருகின்றனர். அதில் 12 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு KPY சரத் சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி குடியேறியுள்ளார்.
இதே போன்று சில தினங்களுக்கு முன்பு ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ரோபோ சங்கர் தனது பேரனை கையில் வாங்கிய தருணத்தை வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்த நிலையி தான் அதே போன்று கவிஞர் சினேகன் தனது இரட்டை பெண் குழந்தைகளை முதல் முறையாக கையில் ஏந்திய தருணத்தை எமோஷனல் வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் 1997ம் ஆண்டு புத்தம் புது பூவே என்ற பாடல் எழுதி பாடலாசிரியராக களமிறங்கியவர் சினேகன். சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாக சினேகன் கவிஞவர் வைரமுத்துவிடம் 5 ஆண்டுகாலம் பணியாற்றியிருக்கிறார். இதையடுத்து இளந்தென்றல் மாத இதழின் ஆசிரியராக 3 ஆண்டுகள் பணியாற்றிய சினேகன் இயக்குநர் கே பாலசந்தரின் ஆதரவுடன் சினிமாவில் பாடல்கள் எழுத ஆரம்பித்தார்.
முதல் முறையாக இயக்குநர் எஸ் ஏ ராஜ்குமாரின் புத்தம் புது பூவே படத்திற்கு பாடல்கள் எழுதும் வாய்ப்பு பெற்றார். ஆனால், இந்த படம் திரைக்கு வரவில்லை. இதையடுத்து தான் அருண் விஜய் நடிப்பில் வந்த தோழா தோழா, அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள் என்ற பாடலை எழுதி அதிகளவில் பிரபலமானார்.
இதே போன்று சூர்யாவின் மௌனம் பேசியதே, விக்ரமின் சாமி, சேரனின் ஆட்டோகிராப், ஜீவாவின் ராம், தனுஷின் ஆடுகளம் என்று பல படங்களுக்கு ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். இந்த நிலையில் தான் சினேகன் கடந்த 2021 ஆம் ஆண்டு நீண்ட நாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக வீடியோ, புகைப்படங்களை எல்லாம் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். மேலும், சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை கூட இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தனர். அதன் பிறகு சீமந்தம் நடந்தது.
இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி சினேகன் மற்றும் கன்னிகா தம்பதியினருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இது குறித்து இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து முதல் முறையாக தனது இரட்டை பெண் குழந்தைகளை கையில் ஏந்திய அந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தை சினேகன் வீடியோவாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் கன்னிகாவை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தது முதல் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது வரை எல்லா காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.